பூக்கடைக்குச் சென்று மாணவிக்கு நேரில் உதவிய ஆட்சியர் | தமிழகத்தில் அதிசயம்!

 

பூக்கடைக்குச் சென்று மாணவிக்கு நேரில் உதவிய ஆட்சியர் | தமிழகத்தில் அதிசயம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில், செங்கம் அருகே மேலப்பாளையத்தைச் சேர்ந்த மாணவி இலக்கியவாணி. இவரது தந்தை செங்கம் புதிய பேருந்து நிலையத்தின் எதிரே பூக்கடை நடத்தி வருகிறார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில், செங்கம் அருகே மேலப்பாளையத்தைச் சேர்ந்த மாணவி இலக்கியவாணி. இவரது தந்தை செங்கம் புதிய பேருந்து நிலையத்தின் எதிரே பூக்கடை நடத்தி வருகிறார். 

பூக்கடை மூலம் வரும் வருமானத்தில் தான் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, தன் மகளையும் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் படிக்க வைத்தார். மூன்று ஆண்டுகள் தனது மகளை நர்ச்சிங் கல்லூரியில் படிக்க வைத்த மாணவியின் தந்தை உதயகுமாரால், தற்போது இறுதி ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. 

collector

இந்நிலையில், மேலும் கல்வியைத் தொடர முடியாத வேதனையில் மாணவி இலக்கியவாணி, கல்லூரிக்குச் செல்லாமல் தந்தைக்கு உதவியாக பூக்கடையிலேயே வேலை செய்து வந்தார். இருப்பினும், மனம் தளராமல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி மூலமாக தனது நிலையை எடுத்துச் சொல்லி தகவல் அனுப்பினார். அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் நேரில் சென்று கோரிக்கை மனுவையும் அளித்தார். 

collector

இன்றும், நேர்மையான அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பதற்கான சாட்சியாக, உதயகுமாரின் பூக்கடைக்கு நேற்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் சென்றார். இலக்கியவாணியுடன் சேர்ந்து பூ கட்டிய படியே, அவரது நிலையை கேட்டறிந்தார். பின்னர். 40 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை வழங்கினார். தன்னுடைய கல்லூரிப் படிப்பு மேலும் தொடரப் போகிற மகிழ்ச்சியில் திளைத்த இலக்கியவாணியிடம், எவ்வளவு கஷ்டங்களும், இடர்பாடுகளும்  வந்தாலும் படிப்பை பாதியில் நிறுத்தக் கூடாது என்றும் ஆட்சியர் கந்தசாமி அறிவுறுத்தினார்.