புவிஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் ஐன்ஸ்டீனா? நியூட்டனா? – குழம்பிய மத்திய அமைச்சர்

 

புவிஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் ஐன்ஸ்டீனா? நியூட்டனா? – குழம்பிய மத்திய அமைச்சர்

தவறு செய்யாத மனிதனால் புதிதாக எதையும் சாதிக்க முடியாது என்ற ஐன்ஸ்டீன் வார்த்தையை மேற்கொள்காட்டியுள்ளார்.

புவிஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் ஐன்ஸ்டீன் ‌என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியது விமர்சனத்துக்குள்ளான நிலையில், தவறு செய்யாத மனிதனால் புதிதாக எதையும் சாதிக்க முடியாது என்ற ஐன்ஸ்டீன் வார்த்தையை மேற்கொள்காட்டியுள்ளார்.

piyush

டெல்லியில் வர்த்தக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பியூஷ் கோயல், புவியீர்ப்பு விசையை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்பதற்கு, கணிதம் உதவவில்லை என பேசியிருந்தார். மரத்தில் இருந்து தனது தலை மேல் விழுந்த‌ ஆப்பிளை வைத்து புவியீர்ப்பு விசையை ஐசக் நியூட்டன் கண்டறிந்தார். இந்தச் சூழலில், ஐன்ஸ்டீன் அதை கண்டுபிடித்ததாக பியூஷ் கோயல் தவறாக தெரிவித்திருந்தது, சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளானது.

piyush

காங்கிரஸின் ட்விட்டர் பக்கத்தில் புவியீர்ப்பு விசையை கண்டுபிடிக்க கணிதம் தேவைப்படாவிட்டாலும், தற்போதைய பொருளாதார மந்தநிலையை சீர்படுத்த கணிதம் தேவை என விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு தற்போது பதில் அளித்துள்ள பியூஷ் கோயல், தான் தவறாக கூறியதை ஒப்புக் கொள்வதாக தெரிவித்துள்ளார். புவியீர்ப்பு விசையை ஐன்ஸ்டீன் கண்டுபிடிக்காவிட்டாலும், தவறு செய்யாத மனிதனால் புதிதாக எந்த முயற்சியிலும் ஈடுபட முடியாது ‌என ஐன்ஸ்டீன் தெரிவித்திருப்பதாக பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.