புழலில் இருந்து சென்னைக்கு குடிநீர் நிறுத்தம்! இனி சென்னைக்கு கடல் நீர் தான்!!

 

புழலில் இருந்து சென்னைக்கு குடிநீர் நிறுத்தம்! இனி சென்னைக்கு கடல் நீர் தான்!!

சென்னை குடிநீர் ஆதாரமான புழல் ஏரியில் இருந்து சென்னைக்கு ராட்சத குழாய்கள் மூலம் அனுப்பப்பட்டு வந்த தண்ணீரை சென்னை குடிநீர் வாரியம் நிறுத்தியுள்ளது.

கோடை வெயிலின் தாக்கமும், போதிய மழையின்மை காரணமாகவும் தமிழத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. குறிப்பாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்தேக்கங்களான சோழவரம், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி உள்ளிட்ட நீர்த்தேக்கங்கள் வறண்டு வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்ப புழல் ஏரியில் ராட்சத குழாய்கள் மற்றும்  மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டு சென்னை குடிநீர் வாரியத்திற்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது.

புழல் ஏரியில் கடந்த 2 மாதங்களாக 8 ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி சென்னைக்கு தண்ணீர் அனுப்பி வந்த நிலையில் ஏரி முழுவதுமாக வறண்டததால் தண்ணீரை எடுக்க முடியதாத நிலையில், தண்ணீரை நிறுத்தியது  சென்னை குடிநீர் வாரியம். 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட ஏரி முழுவதுமாக வறண்டது.ஏற்கெனவே சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வறண்டதையடுத்து புழல் ஏரியும் வறண்டது.