புளோரிடாவில் தொடர்ந்து கொல்லப்படும் டால்பின்கள் – தகவல் கொடுப்பவருக்கு ரூ.14 லட்சம் சன்மானம்

 

புளோரிடாவில் தொடர்ந்து கொல்லப்படும் டால்பின்கள் – தகவல் கொடுப்பவருக்கு ரூ.14 லட்சம் சன்மானம்

அமெரிக்காவின் புளோரிடாவில் மாகாண கடற்கரைகளில் தொடர்ந்து டால்பின்கள் கொல்லப்படுகிறது. இது தொடர்பாக சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடாவில் மாகாண கடற்கரைகளில் தொடர்ந்து டால்பின்கள் கொல்லப்படுகிறது. இது தொடர்பாக சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் புளோரிடாவின் நேப்ளஸ் பகுதியில் இறந்த டால்பின் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் உடலில் காயங்கள் தென்பட்டன. புல்லட் அல்லது கூர்மையான ஆயுதத்தால் அந்த டால்பின் தாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இவ்வாறு டால்பின்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது.

ttn

யார் இந்த காரியத்தை செய்கிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இதுதொடர்பாக தகவல் கொடுப்பவருக்கு 20 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.14 லட்சத்திற்கு மேல்) சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்க கடல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை டால்பின்கள் நல வாரியமும் ஆமோதித்துள்ளது.