புளித்த மாவு பிரச்னை: எழுத்தாளர் ஜெயமோகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு!

 

புளித்த மாவு பிரச்னை: எழுத்தாளர் ஜெயமோகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு!

புளித்த மாவு  பிரச்னையில் எழுத்தாளர் ஜெயமோகன் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வலியுறுத்தியுள்ளது. 

புளித்த மாவு  பிரச்னையில் எழுத்தாளர் ஜெயமோகன் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வலியுறுத்தியுள்ளது. 

jayamohan

ரப்பர், காடு, ஏழாம் உலகம் என்று பல நாவல்களை  எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இதுமட்டுமல்லாது பாலா, மணிரத்னம்,ஷங்கர் ஆகியோரின்  படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வசித்து வரும் இவர் சில தினங்களுக்கு முன்பு  வீட்டின் அருகே உள்ள கடைக்கு தோசைமாவு வாங்கப் போனபோது ஏற்பட்ட பிரச்னையில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து வடசேரி காவல்நிலையத்தில் இவர் அளித்த புகாரின் பேரில், கடைக்காரர் செல்வம் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை  கைது செய்தனர்.

இதுகுறித்து கூறிய கடை ஊழியர் ஒருவர், மாவு புளித்துள்ளது என்று ஜெயமோகன், எங்கள் முதலாளியின் மனைவியை அடித்தார். அதனால் முதலாளி செல்வம் வரை தாக்கினார். இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர்.  இதில் காயமடைந்த முதலாளியின் மனைவி தற்போது மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார்’ என்று கூறியுள்ளார்.  

vanigar sangam

இந்நிலையில் ஜெயமோகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளது. அதில் ஜெயமோகனும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.அப்படி இருக்கும் போது  அவர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஜெயமோகன் சண்டையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. அதனால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளனர்.