புல்வாமா போல இந்தியாவில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம் – புலனாய்வு ஏஜென்சிகள் எச்சரிக்கை

 

புல்வாமா போல இந்தியாவில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம் – புலனாய்வு ஏஜென்சிகள் எச்சரிக்கை

புல்வாமா போல மீண்டும் ஒரு தீவிரவாத தாக்குதலை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக புலனாய்வு ஏஜென்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

டெல்லி: புல்வாமா போல மீண்டும் ஒரு தீவிரவாத தாக்குதலை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக புலனாய்வு ஏஜென்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

கடந்தாண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் இந்தியாவின் பாதுகாப்பு படையினர் 40 பேர் கொல்லப்பட்டனர். தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு அந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த நிலையில், அதே தீவிரவாத அமைப்பானது புல்வாமா போல மீண்டும் ஒரு தீவிரவாத தாக்குதலை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக புலனாய்வு ஏஜென்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

ttn

இதற்காக கஸ்னவி படைஎன்ற புதிய பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் குழுவை அந்த அமைப்பு உருவாக்கி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த கஸ்னவி படையின் தற்கொலைப் படை வீரர்கள் வெடிபொருட்களை ஏற்றிய லாரிகள் போன்ற வாகனங்கள் மூலம் காஷ்மீர் மற்றும் எல்லைப் பகுதிகளில் செயல்படும் இந்திய பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்களை நடத்த வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.