புல்வாமா தாக்குதல்: விற்பனையில் களைகட்டும் சேலைகள்!

 

புல்வாமா தாக்குதல்: விற்பனையில் களைகட்டும் சேலைகள்!

புல்வாமா தாக்குதலை அடுத்து, ராணுவ வீரர்கள், தேஜாஸ் போர் விமானம், பீரங்கிகளை அச்சிட்டுள்ளது இதற்கு அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

குஜராத்: புல்வாமா தாக்குதலை அடுத்து, ராணுவ வீரர்கள், தேஜாஸ் போர் விமானம், பீரங்கிகளை அச்சிட்டுள்ளது இதற்கு அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து நடந்த தொடர் தாக்குதல்களில், இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் சிறை பிடித்தது. ஆனால்  இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதால், அபிநந்தனை எந்த நிபந்தனையும் இன்றி விடுவித்தது. இதையடுத்து இந்திய விமானப்படைக்கு இந்தியர்கள் ஏராளமானோர் வாழ்த்துத் தெரிவித்தனர். அதில் குறிப்பாக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் குஜராத்தின் சூரத் பகுதியில், அன்னபூர்ணா இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் ஜவுளியில்,  புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், சேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

pulwama ttn

இதுகுறித்து பேசியுள்ள ஜவுளி நிறுவனத்தின் இயக்குநர் மனிஷ், ‘இந்தப் புடவைகளில் ராணுவத் துறையின் வலிமையைச் சித்தரித்துள்ளோம். புடவைகளில் ஜவான்களின் வலிமை, நவீன ரக பீரங்கிகள், தேஜாஸ் மாதிரியான போர் விமானங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நாடு முழுவதும் புடவைகளுக்கான ஆர்டர்கள் குவிந்துவருகின்றன. இதில் கிடைக்கும் மொத்த லாபத்தையும் வீர மரணமடைந்த குடும்பங்களுக்கு அளிக்க முடிவுசெய்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

 

modi saree

முன்னதாக மக்களவைத் தேர்தல் முன்னோட்டமாகப் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அவரின் உருவம் பொறித்த  சேலை மற்றும்  டி-சர்ட்டுகளின் விற்பனை களைக்கட்டியுள்ளது.