புல்வாமா தாக்குதல்: ராணுவத்தின் கைப்பாவையாக செயல்பட்டார் இம்ரான்கான்; முன்னாள் மனைவி கடும் தாக்கு!

 

புல்வாமா தாக்குதல்: ராணுவத்தின் கைப்பாவையாக செயல்பட்டார் இம்ரான்கான்; முன்னாள் மனைவி கடும் தாக்கு!

இம்ரான்கான் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படுகிறார்.  ராணுவம் அனுமதியோடு தான் அவர் பேசி உள்ளார் என்று அவரது முன்னாள் மனைவி ரெகம்கான் கடுமையாக சாடியுள்ளார்.

இஸ்லாமாபாத்: இம்ரான்கான் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படுகிறார்.  ராணுவம் அனுமதியோடு தான் அவர் பேசி உள்ளார் என்று அவரது முன்னாள் மனைவி ரெகம்கான் கடுமையாக சாடியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது குறி வைத்து தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 44 பாதுகாப்புப் படை வீரர்களின் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். 

pulwama

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இந்த தாக்குதல் பாகிஸ்தானின் துணையோடு தான் அரங்கேறியுள்ளது. தீவிரவாத குழுக்களை அந்நாடு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

imran

இதையடுத்து நேற்று முன்தினம் இதுபற்றி பேசிய அந்த நாட்டின் பிரதமர் இம்ரான்கான் புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக கூறும் இந்தியா அதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும் என ஆவேசமாக கூறினார். தாக்குதல் நடந்த 5 நாட்களுக்கு பிறகு வாய் திறந்ததற்காக இம்ரான்கான் விமர்சனங்களுக்கு உள்ளாகினார்.

reham

இந்நிலையில் இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரெகம்கான், ‘இம்ரான்கான் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படுகிறார்.  ஒரு நாளும் தனக்கு கற்பித்த பாடங்களில் இருந்து அவர் மீறுவதில்லை. ராணுவம் எதற்கு அனுமதி அளித்ததோ அந்த அளவே அவர் பேசி உள்ளார். இந்தியாவிலோ அல்லது உலகின் பிற நாடுகளிலோ இதுபோன்ற பெரிய தாக்குதல்கள் எங்கு நடந்தாலும் பாகிஸ்தான் பிரதமர் அதற்கு உடனடியாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து’ என்றார்.