புல்வாமா தாக்குதல் குறித்த விவாதம்: தேர்தல் பணிக்காக ஜகா வாங்கிய பிரதமர்

 

புல்வாமா தாக்குதல் குறித்த விவாதம்: தேர்தல் பணிக்காக ஜகா வாங்கிய பிரதமர்

புல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்த விவாதத்தில் கலந்துகொள்ளாமல், தேர்தல் பணிக்காக ஜகா வாங்கியிருக்கிறார் பிரதமர் மோடி.

புதுதில்லி: புல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்த விவாதத்தில் கலந்துகொள்ளாமல், தேர்தல் பணிக்காக ஜகா வாங்கியிருக்கிறார் பிரதமர் மோடி.

காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் அதிகமான சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளார்கள். இந்த செயலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். பிரதமர் மோடியும் மக்களின் கோபத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் தீவிரவாத தாக்குதல் நடந்த இரண்டு நாட்களிலேயே தன் அரசியல் பணிகளை கவனிக்க கிளம்பிவிட்டார் பிரதமர் மோடி.

புல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்த பாஜக விவாதத்தில் கலந்துகொள்ளாமல் கிளம்பிவிட்டார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில்தான் விவாதம் நடத்தப்படுகிறது. சிஆர்பிஎப் வீரர்கள் இறந்து இரண்டே நாள்தான் ஆகிறது, நேற்று வந்தே பாரத் அதிவேக ரயில் ப்ராஜட்டை தொடங்கி வைக்கிறார் மோடி, அந்த நிகழ்வை அவரால் ஒதுக்கி வைக்க முடியும் என்ற போதும் அதை செய்யவில்லை.

vgfdfg

அதேபோல் உபி மாநிலம் ஜான்சியில் பேசிய அவர், மத்தியில் சக்தி வாய்ந்த ஆட்சி அமைய பாஜகவுக்கு வாக்களியுங்கள் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இராணுவ வீரர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் போல் பேசிய பிரதமர் மோடி, கட்சிப் பணிக்காக புல்வாமா தாக்குதல் பற்றிய விவாதத்தை கூட புறக்கணித்து சென்றிருக்கிறார்.