புல்வாமா தாக்குதலை பாக்., நடத்தியது மோடிக்கு உதவுவதற்கா?-கெஜ்ரிவால் கேள்வி?

 

புல்வாமா தாக்குதலை பாக்., நடத்தியது மோடிக்கு உதவுவதற்கா?-கெஜ்ரிவால் கேள்வி?

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இந்தியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த சிறந்த வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்

புதுதில்லி: புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதல் நடத்தியது பிரதமர் மோடிக்கு உதவுவதற்காகவா என தில்லி முதல்வர் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது குறி வைத்து தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 44 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

pulwama attack

புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை தடை செய்ய வேண்டும் எனவும், அதன் தலைவர் மசூத் அசாரை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பான ஆதாரங்களை இந்தியா வழங்கியுள்ள போதிலும், அதனை பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

imran khan

இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இந்தியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த சிறந்த வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பிரதமர் மோடி அரசின் கீழ் பாதுகாப்பு படை வீரர்களை நாம் இழந்துள்ளோம். ராணுவத்தை அரசியலாக்க வேண்டாம் என எதிர்க்கட்சிகள் கூறினால், எங்களுக்கு பாகிஸ்தானில் நண்பர்கள் இருப்பதாக பிரதமர் குற்றம் சாட்டுகிறார். ஆனால், தற்போது உண்மை வெளிவந்துள்ளது. மோடிக்கு இம்ரான் கான் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய பிரதமராக மோடி வர வேண்டும் என பாகிஸ்தான் விரும்புகிறது. நமது எதிரிகளின் ஆதரவு யாருக்கு உள்ளது? என கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து பதிவிட்டிருந்தார்.

pm modi

இதற்கு பதிலளித்து தனது ட்விட்டர் பதிவிட்டுள்ள தில்லி முதல்வர் கெஜ்ரிவால், பாகிஸ்தானும், இம்ரான் காணும் வெளிப்படையாக மோடிக்கு ஆதரவளித்துள்ளனர். பாகிஸ்தானுடன் பிரதமர் மோடிக்கு ரகசிய தொடர்பு உள்ளது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.தேர்தலுக்கு முன்னர் புல்வாமாவில், பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதல் நடத்தியது பிரதமர் மோடிக்கு உதவுவதற்காகவா என அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர் என சாடியுள்ளார்.

இதையும் வாசிங்க

ராகுலை கொலை செய்ய சதி? காங்கிரஸ் கட்சி பரபரப்பு புகார்!