புல்வாமா தாக்குதலை நடத்தியது பிரதமர் மோடி; பண்ணையார் அம்மா பிரேமலதா டெரர்!

 

புல்வாமா தாக்குதலை நடத்தியது பிரதமர் மோடி; பண்ணையார் அம்மா பிரேமலதா டெரர்!

பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட பிரேமலதா, அவருக்கு முரசு சின்னத்தில் வாக்க்களியுங்கள் என மாற்றிக் கூறி விட்டார்

கோவை: புல்வாமா தாக்குதலை நடத்தியது பிரதமர் மோடி தான் என பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா மாற்றி பேசியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் களம் நாடு முழுவதும் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், அதிமுக கூட்டணியில் பாஜக-வும் இடம்பெற்றுள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கூட்டணியை சார்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். 

அந்தவகையில், அதிமுக கூட்டணியில் நீண்ட இழுபறிக்கு பின்னர் ஐக்கியமான தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட பிரேமலதா, அவருக்கு முரசு சின்னத்தில் வாக்க்களியுங்கள் என மாற்றிக் கூறி விட்டார். பின்னர் சுதாரித்துக் கொண்டு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.

premalatha campaign

தொடர்ந்து பேசிய அவர், புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர் தான் உளறிக் கொட்டினார். பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளுகம், கூட்டணி கட்சியினரும் அதிர்ச்சி அடைந்தனர். பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பிரேமலதா, அக்கட்சியின் பிரதமரான மோடி தான் புல்வாமா தீவிரவாத தாக்குதலை நடத்தியது என கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ஒரு பண்ணையார் அம்மா தொனியில் பேசிய பிரேமலதா, செய்தியாளர்களை ஒருமையிலும் பேசினார். அப்படி பேச தெரிந்த பிரேமலதா பொது வெளியில் அதுவும் பிரசாரத்தின் போது, பாதுகாப்பு படை வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை நாட்டின் பிரதமர் நடத்தினார் என உளறிக் கொட்டியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

pulwama attack

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது குறி வைத்து தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 44 பாதுகாப்புப் படை வீரர்களின் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

தேர்தல் ஆணையத்துக்கு டிடிவி தினகரன் நன்றி!