புல்வாமா தாக்குதலை நடத்தியது யார்?, பாகிஸ்தான் பிரதமர் கேட்கும் ஆதாரம் என்ன?

 

புல்வாமா தாக்குதலை நடத்தியது யார்?, பாகிஸ்தான் பிரதமர் கேட்கும் ஆதாரம் என்ன?

புல்வாமா தாக்குதல் பற்றிய தகுந்த ஆதாரங்களை அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்: புல்வாமா தாக்குதல் பற்றிய தகுந்த ஆதாரங்களை அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை தாக்கிப் பேசினார். மேலும் அவர், பிரதமராகப் பொறுப்பேற்றபோது என்னிடம் பேசிய இம்ரான் கான், வறுமையையும், கல்வியறிவின்மையையும் பிராந்தியத்திலிருந்து ஒழிக்க வேண்டும் என்றார். பதான் மண்ணின் மகன்கள் மரியாதையும், சத்தியத்தையும் காப்பாற்றுபவர்கள். தீவிரவாதத்தை எப்படி ஒழிக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என மோடி பேசினார்.

இதற்கு பிரதமர் இம்ரான் கான் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், புல்வாமா தாக்குதல் குறித்த தகுந்த ஆதாரங்களை அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடி அமைதிக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

புல்வாமா தாக்குதலுக்கு காரணம் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பும், அதன் தலைவர் மசூத் அசாரும் என்பது தெரியும். இதுவே நடவடிக்கை எடுப்பதற்குப் போதுமான ஆதாரம். ஆனால், ஆதாரங்கள் கேட்பது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க விருப்பமில்லாமல் இருப்பதைக் காட்டுகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் தகுந்த ஆதாரங்கள் கேட்பதன் மூலம், ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் தவிர இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.