புல்வாமா தாக்குதலுக்கு பிறகு மதவாதத்தால் ஒடுக்கப்படும் காஷ்மீர் இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய குழந்தைகள்; அதிர்ச்சி தகவல்?!

 

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு மதவாதத்தால் ஒடுக்கப்படும் காஷ்மீர் இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய குழந்தைகள்; அதிர்ச்சி தகவல்?!

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு காஷ்மீர் இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய குழந்தைகள் மதவாதத்தால் ஒடுக்கப்பட்டு வருகின்றனர்.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு காஷ்மீர் இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய குழந்தைகள் மதவாதத்தால் ஒடுக்கப்பட்டு வருகின்றனர்.

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி 40-க்கும் அதிகமான சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். அந்த இயக்கம் பாகிஸ்தானில் இருப்பதால், இந்திய மக்கள் பாகிஸ்தான் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். ஆனால் தேசியவாதிகள் என தங்களை காட்டிக்கொள்ளும் சில  மதவாதிகள் இதனை இஸ்லாமிய வெறுப்பாக மாற்றி வருகிறார்கள்.

காஷ்மீர் மாணவர்களும், தெருவோர வியாபாரிகளும் மதவாத கும்பலால் தாக்கப்பட்டது இதற்கு ஓர் உதாரணம். அதேபோல் பள்ளிகள், கல்லூரிகளிலும் இஸ்லாமிய மாணவர்கள் மீது வன்மத்தை உமிழ்கின்றனர். ஒரு பள்ளியில், இஸ்லாமிய சிறுவர்களை பாகிஸ்தான் செல்லும்படி கூறியிருக்கிறார்கள் உடன் பயிலும் மாணவர்கள். அதேபோல் ஷெய்க் மொஹ்சின் அலி எனும் பத்திரிகையாளரின் இரண்டாம் வகுப்பு படிக்கும் பையன் இதேபோல தொல்லையை சந்தித்துள்ளான். அவனது நண்பர்கள், இஸ்லாமியர்கள் நீங்கள் எல்லாம் கெட்டவர்கள், இந்துக்களை கொலை செய்வீர்கள் என அவனை சாடியுள்ளனர். இதுபோன்ற சம்பவம் இஸ்லாமிய தாய்மார்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலை எப்படி கையாளுவது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.

இஸ்லாமியர்கள் அனைவரையும் பாகிஸ்தானிகள் என மதவாத கும்பல் சித்தரித்து வருகின்றனர். புல்வாமா தாக்குதலால் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களிலும் இஸ்லாமியர்கள் இருப்பதை மறந்து மதவெறியை பரப்பி வருகிறது. மதவாதத்தால் ஒடுக்கப்படும் குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை சிந்திக்க மறுக்கிறது மதவாத கும்பல்.அதுமட்டுமல்லாது மதவாதத்தை விதைப்பதில் இந்திய ஊடகங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு என பல இஸ்லாமிய பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான அமைதி நிலவரமே இந்த சூழலில் கொஞ்சம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.