புல்வாமா தாக்குதலால் நின்று போன திருமணத்தின் தற்போதைய நிலை இது தான்!?

 

புல்வாமா தாக்குதலால் நின்று போன திருமணத்தின் தற்போதைய நிலை இது தான்!?

புல்வாமா தாக்குதல்  காரணமாக  நின்றுபோன  ராஜஸ்தான் இளைஞரின் திருமணம் மீண்டும் நடைபெறவுள்ளது. 

ராஜஸ்தான் : புல்வாமா தாக்குதல்  காரணமாக  நின்றுபோன  ராஜஸ்தான் இளைஞரின் திருமணம் மீண்டும் நடைபெறவுள்ளது. 

ராஜஸ்தான் இளைஞரின் திருமணம்

rajastan

ராஜஸ்தானின் பார்மரின் கெஜாத் கா பார் கிராமத்தை சேர்ந்தவர், மகேந்திர சிங்.  இவருக்கும் பாகிஸ்தானின் சிந்த் பகுதியின் சியோனி கிராமத்தைச் சேர்ந்த சகான் கன்வார் என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.  இவர்களின் திருமணம் கடந்த  மார்ச் 8ம் தேதி நடைபெற இருந்தது.  இதற்காக மகேந்திர சிங்கின் குடும்பத்தார் 5 பேருக்கு, பாகிஸ்தான் அரசு 90 நாட்கள் விசா வழங்கியிருந்தது. இதனால் தார் எக்ஸ்பிரஸ் மூலம் பாகிஸ்தான் செல்ல மகேந்திர சிங் குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர். 

புல்வாமா  தாக்குதல்

pulwama

இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் 14 -ஆம் நாள், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனம் மீது குறி வைத்து தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 44 பாதுகாப்புப் படை வீரர்களின் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.இந்த சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. 

மீண்டும் டும் டும் டும் 

marriage

அப்போது சூழ்நிலை காரணமாக மகேந்திர சிங் குடும்பத்தார், பெண் வீட்டாரிடம் பேசி திருமணத்தை தற்போதைக்கு ரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் எல்லையில் பதற்றமற்ற சூழல் நிலவி வருவதால், மகேந்திர சிங் – சகான் கன்வாரை  திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இவர்களது திருமணம் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

இதையும் வாசிக்க: நன்றியுள்ள நாய்; உயிரை கொடுத்து 30 பேரின் உயிரை காப்பாற்றிய சோக சம்பவம்!