புல்வாமாவில் பலியான புது மாப்பிள்ளை: கர்நாடகத்தில் சோகம்… பழிக்குப்பழி வாங்க மனைவி வேண்டுகோள்

 

புல்வாமாவில் பலியான புது மாப்பிள்ளை: கர்நாடகத்தில் சோகம்… பழிக்குப்பழி வாங்க மனைவி வேண்டுகோள்

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நிகழ்ந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் கர்நாடகத்தைச் சேர்ந்த புதுமாப்பிள்ளையும் பலியானார்.

பெங்களூரு: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நிகழ்ந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் கர்நாடகத்தைச் சேர்ந்த புதுமாப்பிள்ளையும் பலியானார்.

மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா குடிகெரே கிராமத்தைச்சேர்ந்த ஹொன்னயாவின் மகன் குரு, மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர். கடந்த 14ம் தேதியன்று புல்வாமா மாவட்டத்தில் 2,500 வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகன அணிவகுப்பை குறிவைத்து பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப் படை தாக்குதலில் 44 வீரர்கள் பலியாகினர். அதில் குருவும் கொல்லப்பட்டார். சிஆர்பிஎப் படையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு அவர் சேர்ந்தார். முன்னதாக அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியாற்றினார். பின் காஷ்மீருக்கு பணியிட மாற்றமானார்.

fdf

விடுமுறை கழித்து கடந்த 10ம் தேதிதான் மீண்டும் பணியில் சேர்ந்தார். கொலைத்தாக்குதல் சம்பவம் நிகழ்ந்ததற்கு முதல்நாள் குரு தனது தாயுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். மறுநாள் அவர் கொல்லப்பட்டார். 6 மாதங்களுக்கு முன்புதான் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் புதிய வீடும் கட்டியுள்ளார். குருவின் மரணச் செய்தி அவரது மனைவி கலாவதிக்கு 15ம் தேதி சொல்லப்பட்டது. இதைக் கேள்விப்பட்டதும் கலாவதி மிகுந்த சோகத்துக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளார். 

கணவர் பற்றி கலாவதி கூறியதாவது:

sfsg
15ம் தேதி இரவு 11 மணியளவில் அவரது மரணச் செய்தி கேட்டதும் உடைந்து போனேன். அதற்கு முதல்நாள் அவர் தொலைபேசியில் பேசியபோது வீட்டு வேலை இருந்ததால் நான் பேசவில்லை.

நான் மீண்டும் அழைத்தபோது அவரது தொலைபேசி இணைப்புக்கு வெளியே இருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் இறப்பதற்கு முன்பாக அவருடன் பேசும் வாய்ப்பை இழந்த துரதிர்ஷ்டசாலியாகி விட்டேன். எனது கணவர் எனக்குத் திரும்பக் கிடைக்க வேண்டும். நம் நாட்டு எல்லையைக் காப்பதில் தொடர்ந்து வீரர்கள் பலியாகிக் கொண்டிருப்பதை விட அவர்களை வீட்டுக்கு திரும்ப அனுப்பிவிடலாம். அவர்கள் தங்கள் குடும்பத்தையாவது கவனித்துக் கொள்வார்கள்.

என் கணவர் குரு பணியின்போது நாட்டின் பல்வேறு இடங்களில் மிகவும் ஆபத்தான வேலையில் சிறப்பாக பணியாற்றியதாகச் சொல்வார். அவர் ஸ்ரீநகரில் தான் இருந்தார். புல்வாமா போவதைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை. நாட்டுக்காக அவர் உயிர் நீத்திருப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.
எனது கணவர் உள்ளிட்டோரின் மரணத்துக்குக் காரணமானத் தீவிரவாதிகளை இந்த அரசு பழிக்குப்பழியாகக் கொல்ல வேண்டும் என்று கண்ணீருடன் கலாவதி கூறினார்.