புலியிடம் சிக்கிக் கொண்ட அனிருந்; ‘தும்பா’ வைரல் வீடியோ செய்த சாதனை!?

 

புலியிடம் சிக்கிக் கொண்ட அனிருந்; ‘தும்பா’ வைரல் வீடியோ செய்த சாதனை!?

தும்பாவில் ஒரு பாடலுக்கு அனிருத் இசை அமைக்கிறார். மற்ற பாடல்களுக்கு இளம் மற்றும் சென்சேஷனல் இரட்டை இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் மற்றும் சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார்கள்

சென்னை: குழந்தைகளின் ஃபேவரைட்டான அனிருத் மற்றும் டைகரஸ் தும்பா பங்கு பெறும் ‘தும்பா’ வீடியோ வெளியாகி 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் யூ-டியூப்-ல் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

எதிர் நீச்சல், காக்கி சட்டை மற்றும் கொடி போன்ற திரைப்படங்களில் துரை செந்தில் குமாரிடம் பணிபுரிந்த ஹரிஷ் ராம் இயக்கும் படம் ‘தும்பா’. முழுக்க ஃபாண்டஸி கலந்த படமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள இப்படத்தில், இளம் நாயகன் தர்ஷன், தீபா மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நரேன் இளன் ஒளிப்பதிவு செய்கிறார். கலைவாணன் படத்தொகுப்பு செய்கிறார்.

தும்பாவில் ஒரு பாடலுக்கு அனிருத் இசை அமைக்கிறார். மற்ற பாடல்களுக்கு இளம் மற்றும் சென்சேஷனல் இரட்டை இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின்  மற்றும் சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார்கள். ரீகல் ரீல்ஸ் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் பேனரில் வெளியாகும் இந்த படத்தை சுரேகா நியாபடி தயாரிக்கிறார்.

குடும்பம் மற்றும் குழந்தைகளை மையப்படுத்திய இப்படத்தை இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். இந்நிலையில், தும்பா படத்தின் ப்ரோமோஷனல் வீடியோ வெளியாகி லைக்ஸ்களை அள்ளி வருகிறது. அத்துடன், தும்பா’ வீடியோ வெளியாகி 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் யூ-டியூப்-ல் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து இந்த வீடியோவை உருவாக்கிய இயக்குனர் ஹரிஷ் ராம் கூறுகையில், இதைப் பற்றி நான் என்ன சொல்றது? இது முற்றிலும் எதிர்பாராதது, எங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. சாகச, கற்பனை வகை படங்களை குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் எப்போதும் விரும்புவார்கள் என்ற நம்பிக்கை எங்கள் மொத்த குழுவுக்கும் இருந்தது. அதனால் தான் மேற்கு நாடுகளில் இந்த காட்சிகள் மாதக்கணக்கில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடுகிறது.

எனினும், எங்கள் தும்பாவிற்கு இந்த வகையான வரவேற்பு கிடைக்கும் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. நாங்கள் இப்போது குழந்தையின் மகிழ்ச்சி மனநிலையில் இருக்கிறோம். புதிய அணியை உள்ளடக்கிய ஒரு படம் இதுபோன்ற வரவேற்பை பெறும் என்று நாங்கள் நினைத்ததில்லை. இந்த படைப்பு மற்றும் புதிய முயற்சிக்கு ஆதரவாக இருந்த சகோதரர் அனிருத்துக்கு நன்றி. இந்த வீடியோவின் ஒரு பகுதியாக இருக்க அவர் எந்த யோசனையும் இன்றி ஒப்புக் கொண்டார் என்றார்.