‘புலித்தோல் உடை.. சிறிய உடுக்கை’.. இணைய தளத்தைக் கலக்கும் ‘லிட்டில் போல் நாத்’ : வைரல் வீடியோ !

 

‘புலித்தோல் உடை.. சிறிய உடுக்கை’.. இணைய தளத்தைக் கலக்கும் ‘லிட்டில் போல் நாத்’ : வைரல் வீடியோ !

என்ன தான் பெரியவர்கள் கலர் கலராக உடை அணிந்து டிக் டாக் செய்தாலும், மக்களின் மனத்தைக் கவருவது என்னமோ குழந்தைகள் தான்.

அந்தந்த விழாக்கள் அல்லது நாட்களுக்கேற்ப இப்போதெல்லாம் டிக் டாக் செய்வது இணைய தளத்தில் வாடிக்கையாகி விட்டது. என்ன தான் பெரியவர்கள் கலர் கலராக உடை அணிந்து டிக் டாக் செய்தாலும், மக்களின் மனத்தைக் கவருவது என்னமோ குழந்தைகள் தான். குழந்தைகளின் தத்தித் தவழும் நடையும், மயக்கவைக்கும் சிரிப்பும் காண்போரின் மனதைக் கரைய வைக்கும்.

ttn

இப்படி பல குழந்தைகளின் வீடியோக்கள் இணைய தளத்தில் உலா வந்து கொண்டிருக்கையில் நேற்று சிவராத்திரியை முன்னிட்டு ஒரு குழந்தை, சிவன் போன்று வேடம் அணிந்து டிக் டாக் செய்துள்ளது. சிவனின் சிலைகளாக இருந்தாலும் சரி, காட்சிகளாக இருந்தாலும் சரி எப்போதுமே ரம்மியமாக தான் இருக்கும். ஆனால், அதே சிவ பெருமானைக் குழந்தை வடிவில் பார்த்தால் பார்ப்போர் மனது சொக்கிப்போகும் அல்லவா….

ttn

டிக் டாக்கில் இப்போது வைரல் ஆகி வரும் இந்த வீடியோவில் வரும் சிறுவனை நெட்டிசன்கள் ‘லிட்டில் போல் நாத்’ என்று செல்லமாக அழைக்கின்றனர். நேற்று மகாசிவராத்திரியை முன்னிட்டு அந்த குழந்தை புலித்தோல் போன்ற உடையை அணிந்து கையில் சிறிய உடுக்கையுடன் கைகளை உயர்த்தி “பாம் லஹிரி” என்னும் பாடலுக்கு டிக் டாக் செய்துள்ளது. இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலர் லைக்ஸ் செய்து வருகின்றனர். பல பேர் ” கியூட் சிவன், குட்டி சிவன், ரொம்ப கியூட்” என்றெல்லாம் கமெண்ட் செய்துள்ளனர்.