புலிக்குட்டியை கொஞ்சும் ஜி.வி. பிரகாஷ்!! 

 

புலிக்குட்டியை கொஞ்சும் ஜி.வி. பிரகாஷ்!! 

புலியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்

சென்னை:புலியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோ தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ். 

நடிகரும்,இசையமைப்பாளரும்மனா ஜி.வி. பிரகாஷ் நடித்த “சர்வம் தாள மயம்” வரும் பிப்ரவரி 1ம் தேதி வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும், காதலர் தினம் ஆன பிப்ரவரி 14ம் தேதி அர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டேவுடன் இணைந்து நடித்துள்ள 100% காதல் திரைப்படமும் வெளியாகவுள்ளது. இவர் படங்களையும் தாண்டி சமூகம் சார்ந்த பிரச்னைக்கு கருத்துக்கள் மட்டும் தெரிவிக்காமல் நேரில் சென்றும் உதவி செய்துவருகிறார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#goodevening friends

A post shared by G.V.Prakash Kumar (@gvprakash) on

இந்நிலையில் ஒரே மாதத்தில் இரு படங்கள் ரிலீசாகும் மகிழ்ச்சியில் உள்ள ஜி.வி. பிரகாஷ், தற்போது புலிக்குட்டி ஒன்றின் அருகில் இருந்து எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த புலி மேல் படுத்துக் கொண்டும், அதனை மடியில் வைத்து கொஞ்சும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் அவை மாஸாக இருந்தாலும் ஜாக்கிரதையாக இருக்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#tiger #pic happy morning #goodmorning

A post shared by G.V.Prakash Kumar (@gvprakash) on