புலிகளுக்கு வில்லான நடிச்சாச்சு,அடுத்து எலியோட மோதும் எஸ்.ஜே.சூர்யா!

 

புலிகளுக்கு வில்லான நடிச்சாச்சு,அடுத்து எலியோட மோதும் எஸ்.ஜே.சூர்யா!

நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மான்ஸ்டர்’.

நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மான்ஸ்டர்’. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தை, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்

எஸ்.ஜே.சூர்யா காமெடிப் படமான இதில், எலி பிரேதமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இப்படம் வருகிற 17-ம் தேதி ரிலீஸாக உள்ளது . அதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (மே 8) நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய எஸ்.ஜே.சூர்யா ‘இந்த படத்தின் கதையை நெல்சன் என்னிடம் சொல்ல வந்தபோது, நீங்களும் ஒரு எலியும் என ஆரம்பித்தார். பல புலிகளுக்கு வில்லான நடிச்சாச்சு, இப்போ போய் எலியோட மோத சொல்றீங்களேன்னு கேட்டேன்.  ஆனால் படத்தின் கதை மிக சுவாரஸ்யமாக இருக்கும். எலி ஒரிஜினலாக தெரிய வேண்டும் என்பதற்காக, கிராபிக்ஸ் எதுவும் செய்யாமல், நிஜ எலியை வைத்தே படப்பிடிப்பு நடத்தினார் இயக்குநர் நெல்சன். இதில் நடித்தது எனக்கு மிகவும்  ஆத்ம திருப்தியைக் கொடுத்தது   இருக்கிறது. 

monster

பொதுவாகவே செல்லப் பிராணிகளுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கும். அதுபோல் குழந்தைகளுக்கு மான்ஸ்டர் படம் மிகவும் பிடிக்கும். நான் நடித்து முதன் முதலாக யூ சான்றிதழ் வாங்கிய படம் இது தான். நான் எடுக்கும் படங்களை வைத்து நான் ஏதோ சகலகலா வல்லவன், கமல்ஹாசன் போல் சந்தோசமா இருப்பவன் என்று எண்ணுகிறார்கள். ஆனால் நிஜத்தில் நான் அப்பாவி என்பது பலருக்கு தெரியாது.

monster

அமிதாப் சாருடன் இந்தியில் ஒரு படம் நடிச்சுட்டு இருந்தேன். அதில், ஒரு ஷாட்டில் எனக்கு வெற்றித் திலகம் வைத்துவிட்டார். அந்தக் காட்சி எடுக்கப்பட்ட அன்றுதான் நெல்சன் எனக்குத் தொலைப்பேசியில் ‘மான்ஸ்டர்’ ரிலீஸ் தேதியைச் சொன்னார்.மிகப்பெரிய வியாபாரம் கொண்ட ஹீரோவாக வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக இந்த எலி அதற்கு முதற்படி எடுத்து வைக்கும் என நம்புகிறேன். இந்த உலகத்துக்கு நான் ஹீரோவா என்று தெரியாது. ஆனால், எனக்கு நான் ஹீரோவாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதை விரைவில் உலகமும் நம்பி வரவேற்கும்’ என்று கூறியுள்ளார்.