புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் மோடியை பாராட்டிய காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி…. தர்மசங்கடத்தில் காங்கிரஸ் கட்சி

 

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் மோடியை பாராட்டிய காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி…. தர்மசங்கடத்தில் காங்கிரஸ் கட்சி

300 சிறப்பு ரயில்கள் அறிவிப்பின் மூலம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோரை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்ப மேற்கொண்ட உங்களது உண்மையான முயற்சியை பாராட்ட விரும்புவதாக பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 300 சிறப்பு ரயில்கள் அறிவிப்பின் மூலம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், மாணவர்கள், யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்பட வெளிமாநிலங்களில் தவித்து வந்த நபர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பும் உங்கள் உண்மையான முயற்சியை நான் பாராட்ட விரும்புகிறேன். புலம்பெயர்ந்த தொழிலாளர்களும், வீட்டை விட்டு  வெளியேறியவர்களும் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளனர். 

பிரதமர் மோடி

அவர்களால் கட்டணத்தை (ரயில் பயணம்) செலுத்த முடியாது, அது மிக அதிகம் மற்றும் அடைய முடியாதது. எனவே இலவச பயணம் இல்லாவிட்டாலும், டிக்கெட் கட்டணத்தை குறைப்பது குறித்து பரிசீலனை செய்யுங்க. சிறப்பு பயணிகள் ரயில்களில் சாதாரண பயணிகளால் அதிக விலையுயர்ந்த டிக்கெட்டுகளை வாங்க முடியாது என்பதால் குளிர்சாதன பெட்டிகளுடன் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளையும் இணைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்

லாக்டவுனால் சிக்கி தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தை முறையாக கையாளவில்லை என மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் கட்சி பலமுறை கடுமையாக குற்றச்சாட்டி பேசியது. ஆனால் தற்போது அந்த கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அதே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் பிரதமர் மோடியை பாராட்டி  இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.