புலம்பெயர்ந்தோரிடம் ரெயில் கட்டணம் வாங்க வேண்டாம் – மத்திய அரசிடம் உத்தவ் தாக்கரே கோரிக்கை

 

புலம்பெயர்ந்தோரிடம் ரெயில் கட்டணம் வாங்க வேண்டாம் – மத்திய அரசிடம் உத்தவ் தாக்கரே கோரிக்கை

புலம்பெயர்ந்தோரிடம் ரெயில் கட்டணம் வாங்க வேண்டாம் என மத்திய அரசிடம் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லி: புலம்பெயர்ந்தோரிடம் ரெயில் கட்டணம் வாங்க வேண்டாம் என மத்திய அரசிடம் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின்போது, மற்ற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரெயிலில் தங்கள் சொந்த ஊருக்கு பயணிக்க எந்த ரெயில் கட்டண தொகையும் வசூலிக்க வேண்டாம் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மத்திய அரசை கோரியுள்ளார்.

ttn

ஏறக்குறைய ஐந்து லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு மாநில வசதிகளில் 40 நாட்களாக உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு வீடு திரும்புவதற்கான விருப்பத்தை மக்கள் இப்போது வெளிப்படுத்தியுள்ளதாக தாக்கரே நேற்று இரவு மத்திய அரசுக்கு அளித்த தகவல்தொடர்பு ஒன்றில் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக புலம்பெயர்ந்த இந்த மக்களுக்கு வருமான ஆதாரங்கள் ஏதும் இல்லை. எனவே, மனிதாபிமான அடிப்படையில் ரெயில் பயணத்திற்கு உண்டான கட்டணத்தை மத்திய அரசு வசூலிக்கக் கூடாது” என்று முதல்வர் கூறினார். மேலும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் தனிநபர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ரெயில் டிக்கெட் விலையை ஏற்க முன்வந்துள்ளதாக தாக்கரே கூறினார்.