புற்றுநோயோடு போராடி வந்த பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் காலமானார்! – ரஜினிகாந்த் இரங்கல்

 

புற்றுநோயோடு போராடி வந்த பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் காலமானார்! – ரஜினிகாந்த் இரங்கல்

பிரபல நடிகர் ராஜ் கபூரின் இரண்டாவது மகனாக ரிஷி கபூர் 1952ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி மும்பையில் பிறந்தார். தன்னுடைய மேரா நாம் ஜோக்கர் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக ரிஷி கபூரை அறிமுகம் செய்தார் ராஜ் கபூர்

பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் (67) இன்று காலமானார். புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
பிரபல நடிகர் ராஜ் கபூரின் இரண்டாவது மகனாக ரிஷி கபூர் 1952ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி மும்பையில் பிறந்தார். தன்னுடைய மேரா நாம் ஜோக்கர் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக ரிஷி கபூரை அறிமுகம் செய்தார் ராஜ் கபூர். அதன் பிறகு 1973ம் ஆண்டு பாபி என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அமிதாப்பச்சனின் பிரபல படமான அமர், அக்பர், ஆன்டனி படத்தில் அக்பராக நடித்திருந்தவர் ரிஷி கபூர். 

rishi-kapoor

ரிஷி கபூருக்கு கடந்த 2018ம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 2019 செப்டம்பர் வரை ரிஷி கபூர் அமெரிக்காவிலேயே இருந்து சிகிச்சை பெற்றுக்கொண்டார்.
மும்பையில் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வந்த ரிஷி கபூருக்கு இன்று அதிகாலை திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக மும்பை ஹெச்.என்.ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் ரிஷி கபூரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். ரிஷி கபூரின் மகன்தான் நடிகர் ரன்பீர் கபூர் என்பது குறிப்பிடத்தக்கது. ரிதிமா கபூர் என்று ஒரு மகளும் உள்ளார்.
ரிஷி கபூர் மரணத்துக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “அவர் சென்றுவிட்டார்..! ரிஷி கபூர் சென்றுவிட்டார்… இறந்துவிட்டார்… நான் நெருங்கிப்போய்விட்டேன்” என்று கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “நெஞ்சம் உடைந்தது… என் மிக நெருங்கிய நண்பன் ரிஷி கபூர் ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும்” என்று கூறியுள்ளார். நேற்று இர்ஃபான் கான் மரணம் அடைந்த நிலையில் இன்று ரிஷி கபூர் இறந்த செய்தி பாலிவுட் வட்டாரத்தை அதிரச் செய்துள்ளது.