புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அழகை இழந்த போலீஸ்..! முடியை காணிக்கையாக வழங்கியருக்கு குவியும் பாராட்டு..

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அழகை இழந்த போலீஸ்..! முடியை காணிக்கையாக வழங்கியருக்கு குவியும் பாராட்டு..

புற்றுநோயால் தலைமுடியை இழந்தவர்களுக்கு விக் வைக்க தன்னுடைய முடியை காணிக்கையாக கொடுத்து அசத்தி உள்ளார் ஒரு மூத்த பெண் காவல்அதிகாரி.கேரள மாநிலம் திரிசூர் அருகே உள்ளது இரிஞ்சலக்குடா மகளிர் காவல்நிலையம். 2 குழந்தைகளுக்கு தாயான அபர்ணா லாவகுமார் மூத்த காவல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

aprana

மற்ற பெண்களைப் போல் எப்போதும் தன்னை அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதை விரும்பாத அபர்ணா லாவகுமார், கடந்த செவ்வாய்கிழமை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் தயாரிக்க மொட்டை அடித்துக் கொண்டு தன்னுடைய தலைமுடியை காணிக்கையாக வழங்கி உள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு கீமோதெரபி சிகிச்சை செய்யும்போது அனைத்து முடிகளும் கொட்டிவிடும். அதனால் அவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுவர். அவர்களுக்கு இயற்கையாக முடி வளர்வதில் பிரச்சனை இருக்கும் என்பதால் விக் வைத்துக்கொள்ள தன்னுடய தலைமுறையை தந்ததாக பெருமையுடன் கூறுகிறார் அபர்ணா லாவகுமார். 

aparna

புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் முடி இல்லாமல் இருப்பதால் வகுப்பு தோழர்கள் செய்யும் கிண்டல்கள், கேலிகளால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்று அபர்ணா கூறுகிறார். ஏற்கனவே இதுபோல் அபர்ணா தலைமுடியை காணிக்கையாக அளித்துள்ளார். இதற்கு உயர் காவல் அதிகாரிகளும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். அபர்ணாவின் புகைப்படங்கள் தற்போது பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலத்தை பொறுத்தவரை காவல்துறையினருக்கு சில விதிகள் உள்ளன. முறையான காரணம் இல்லாமல் தாடிகளை வளர்க்கவோ மொட்டையடிக்கவோ கூடாது. 
பொதுவாகவே காவல்துறையினரை பார்த்தாலே பொதுமக்ள் அச்சமடையும் நிலையில் இதுபோன்ற சம்பவங்களால் காவலர்களுக்கும், மக்களுக்கும் உள்ள இடைவெளி குறையும்.