புறாக்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட அவலம்

 

புறாக்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட அவலம்

பசவனக்குடி, எருது கோவில் அருகே உள்ள பூங்காவில் ஜாக்கிங் செல்பவர்கள் புறாக்கள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உகாதி விழாவை கொண்டாட பெங்களூரு மக்கள் எல்லாம் மகிழ்ச்சியுடன் இருக்கும் வேளையில், மனதை நெருடும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பசவனக்குடி பகுதியில் 100-க்கும் அதிகமான புறாக்களை மர்ம நபர் யாரோ விஷம் வைத்து கொன்றிருப்பதாக கூறப்படுகிறது.

jjhjd

பசவனக்குடி, எருது கோவில் அருகே உள்ள பூங்காவில் ஜாக்கிங் செல்பவர்கள் புறாக்கள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். சில புறாக்கள் உயிருக்கு போராடி வருகிறது. மர்ம நபர் யாரோ விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என தெரிகிறது. அங்கு சிதறிக் கிடந்த தானியங்களை எடுத்து பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பியுள்ளனர். 

dh

நேற்று அமாவாசை இரவு, இது துஷ்ட சக்தியின் வேலையாக இருக்கலாம் எனவும் சிலர் தெரிவிக்கின்றனர். மாநகராட்சி ஊழியர்கள் இறந்த புறாக்களை அந்த பூங்காவிலேயே புதைத்துவிட்டனர்.
 

இதையும் படிங்க: பெண்களின் இன்பம் எந்த ஆணையும் சார்ந்து அல்ல; மன வருத்தத்தில் சௌமியா சேத்