புறப்பாடு தாமதம் ! மன்னிப்பு கோரிய இன்டிகோ ! பனி மூட்டத்தால் சென்னை மக்கள் மகிழ்ச்சி !

 

புறப்பாடு தாமதம் ! மன்னிப்பு கோரிய இன்டிகோ ! பனி மூட்டத்தால் சென்னை மக்கள் மகிழ்ச்சி !

மார்கழி மாதத்தில் நிலவும் வழக்கமான பனிமூட்டத்தால் சென்னையில் 2-வது நாளாக விமான போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
மார்கழி மாதம் என்றாலே கடும் பனிமூட்டம் நிலவும். இந்த மாதத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழையும் பெய்யும் என்பதால் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் சென்னை மக்களுக்கு இல்லை.

fog

ஆனால் நேற்றும் இன்றும் அதிகாலை முதல் வழக்கத்துக்கு மாறாக பனிமூட்டம் நிலவியதால் புகை மூட்டமாக காணப்பட்டது சென்னை பெருநகரம். இதனால் சாலைகளில வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடிதான் சென்றன. அதே சமயம் விமானத்தின் புறப்பாடு, வருகையும் தாமதம் ஆனது. இன்று மட்டும் சென்னைக்கு வந்து கொண்டிருந்த 6 விமானங்களில் 4 விமானங்கள் ஐதராபாத்திற்கும், 2 விமானங்கள் திருச்சிக்கும் திருப்பிவிடப்பட்டுள்ளன. 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. 

indigo

இதற்கிடையே விமானம் புறப்பட்டதில் தாமதம் ஏற்பட்டதால், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம், மோசமான வானிலை காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளதால் விமானம் தாமதமாக புறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும்  சென்னையில் மோசமான வானிலை காரணமாக விமானங்கள் புறப்படுவதிலும், தரையிறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளது. நேற்றைய தினம் சென்னையில் ஏற்பட்ட கடும் பனி காரணமாக பல உள்நாட்டு விமானங்களும், சர்வதேச விமானங்களும் தாமதம் அடைந்த