புரோட்டின் நிறைந்த பூச்சிகள்… வைட்டமின் நிறைந்த வண்டுகள்!! 

 

புரோட்டின் நிறைந்த பூச்சிகள்… வைட்டமின் நிறைந்த வண்டுகள்!! 

மாட்டிறைச்சிக்கு தேவைப்படும் உற்பத்தி செலவினங்களை விட கிர்க்கெட் பூச்சிகளை உற்பத்தி செய்யும் செலவினம் குறைவு என்பதோடு மட்டுமல்லாமல் இயற்கை சார்ந்த நலனிலும் பெரும் பங்கு ‌வகிப்பதாகவே அவர் கூறுகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் புவி தினத்தன்று புவியின் தட்ப வெப்ப காலநிலைகளில் மட்டுமே முக்கிய கவனம் செலுத்தப்படும் நிலையில்‌ நமது அன்றாட உ‌ணவில் பூச்சிகளை சேர்த்துக் கொள்வதும் முக்கியம்‌ என்கிறார்கள் உலக நிபுணர்கள். 

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 ஆம் நாள் உலக புவி தினமாக கொண்டாடப்படுவது வழக்கம்‌.இந்தாண்டு புவி தினம் நமது அன்றாட உணவு பழக்கத்தில் பூச்சிகளை சேர்த்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் வல்லுநர்கள் முன்னெடுத்தனர். கிரிக்கெட் பூச்சிகள்,வெட்டுக்கிளிகள் ‌மற்றும் எறும்புகளை உணவுகளில் சேர்த்துக் கொள்ளும் கருத்தில் உணவுப் பிரியர்களும் ஒன்று பட்டே செல்கின்றனர். விலங்கு இறைச்சிகளை விட வண்டுகளில் அதிகளவு புரோட்டீன் சத்துக்கள் இருப்ப‌தாக கூறப்ப‌டுகிறது.அதனாலேயே தென் அமெரிக்க சந்தைகளில் உண்ணக்கூடிய பூச்சிகளின் வரவேற்பு‌ அதிகளவில் உள்ளதாக கூறப்படுகிறது. 

22

அமெரிக்காவைச் சேர்ந்த பூச்சி வகை உணவு‌கள் வல்லுநரனா ஜோசப் யூன் தொடர்ந்து‌ இந்த உணவுகளின் முக்கியத்துவத்தை ‌வலியுறுத்தி வருகிறார்.மாட்டிறைச்சிக்கு தேவைப்படும் உற்பத்தி செலவினங்களை விட கிர்க்கெட் பூச்சிகளை உற்பத்தி செய்யும் செலவினம் குறைவு என்பதோடு மட்டுமல்லாமல் இயற்கை சார்ந்த நலனிலும் பெரும் பங்கு ‌வகிப்பதாகவே அவர் கூறுகிறார்.மேலும் உணவு மற்றும் வேளாண் நலத்துறை பூச்சிகளை உணவில் சேர்த்துக் கொள்வதற்கான 3 முக்கிய காரணங்களை கூறுகிறது.அதாவது சத்துமிக்க புரோட்டீன்கள்,விட்டமின்கள் ,‌குறைந்த அளவு பசுமை வாயுக்களை வெளியேற்றும் தன்மை,குறைந்த அளவே தேவைப்படும் உற்பத்திக்கான பகுதி ஆகியவை பூச்சி உணவு வகைகளில் சாத்தியமாகிறது.‌

eat

பல்வேறு நாடுகளும் தங்களது உணவு கலாச்சாரத்தில் பூச்சிகளை முக்கிய உணவுப்பொருளாக முன்னெடுத்துவரும் நிலையில் இந்தியா போன்ற நாடுகளிலும் இவற்றிற்கு வரவேற்பு‌‌ கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.