புயல் வாய்ப்பு, தென் தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை!

 

புயல் வாய்ப்பு, தென் தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்யில் 35 செ.மீ., மேல்பவானியில் 19 செ.மீ., கோயம்புத்தூர் சின்னக்கல்லாறில் 13 செ.மீ, கன்னியாகுமரி புளித்துறையில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பாங்கான மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்யில் 35 செ.மீ., மேல்பவானியில் 19 செ.மீ., கோயம்புத்தூர் சின்னக்கல்லாறில் 13 செ.மீ, கன்னியாகுமரி புளித்துறையில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், இதன் காரணமாக தென் தமிழக கடலோரப் பகுதி மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுபோக, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவும் வாய்ப்புள்ளதாம்.

Heavy rains in Avalanche

இதற்கிடையே இடையறாத மழைபெரும் கேரளா, கர்நாடகாவில் நாளை முதல் மழை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 12ம் தேதி வட மேற்கு வங்க கடலில் ஒரு தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், வரும் 13ம் தேதி முதல் மழை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.