புயல் சூறாவளி…  97 நாய்களுக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்த பெண்!

புயல் சூறாவளி…  97 நாய்களுக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்த பெண்!

புயல் சூறாவளியில் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஆளாளுக்கு தப்பிச் செல்லும் காலத்தில், சூறாவளியில் இருந்து 97 நாய்களைக் காப்பாற்றி அவற்றிற்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார் அமெரிக்க பெண் ஒருவர்.

dogs

பஹாமாஸின் ஆதரவற்ற நாய்களை மீட்டு முகாம்களில் ஒப்படைக்கும் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார் செல்லா பிலிப்ஸ். இந்நிலையில் தனது வீட்டில் அனைத்து வகைகளான நாய்களும் நிரம்பி இருக்கும் புகைப்படங்களை தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார் செல்லா. இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. பதிவிட்ட 2 நாட்களில் இந்த புகைப்படங்களுக்கு 64 ஆயிரம் பேர் ரியாக்ட் செய்துள்ளனர்.  44 ஆயிரம் பேர் இந்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர். கடந்த ஞாயிறன்று பஹாமாஸை தாக்கிய டோரியன் சூறாவாளியால் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் பயங்கார காற்றும் வீசியது. இந்த இயற்கைச்சீற்றத்தில் ஏராளமான நாய்கள் ஆதரவற்று தவித்ததை கண்டு தனக்கு மிகவும் கவலையளித்ததாகவும் அதனால் தனது வீட்டை அவர்களுக்கு அடைக்கலமாக தந்ததாகவும் தனது முகநூலில் செல்லா பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.  சமுக வலைத்தளங்களில் செல்லா பிலிப்ஸுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.