புயல் எச்சரிக்கை… மணல் காற்று… கதறும் மீனவர்கள்!

புயல் எச்சரிக்கை… மணல் காற்று… கதறும் மீனவர்கள்!

எந்த பக்கம் வந்து யார் சுடுவார்கள் என்று பயந்து, பயந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு இன்னொரு துயர சம்பவமாக உருமாறி இருக்கிறது இராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதி. கடந்த ஆறு நாட்களாக மன்னார் வளைகுடா பகுதியில் கடல் அதிகளவில் சீற்றத்துடன் காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் கடற்கரைப் பகுதிக்கு செல்லவோ, கடலில் குளிக்கவோ கூடாது என காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

sea

இதனால் தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக இன்று 6வது நாளாக ராமேஸ்வரத்தில்  நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால்  சுமார் ஒரு  லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, நாளொன்றுக்கு சுமார்  15 கோடி  ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாம்பன் துறைமுகத்தில் இரண்டாவது நாளாக  தொலைதூர புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தினந்தோறும் மீன்பிடி தொழிலுக்குச் சென்றால் மட்டுமே வீட்டில் அடுப்பெரியும் என்கிற நிலையில், ஒரு வார காலமாக மீன் பிடிக்கச் செல்ல முடியாமல்

மீனவர்கள் தவித்து வருகிறார்கள்.  இந்நிலையில் அதிகாலை முதல் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை பகுதிகளில் தற்போது கடுமையாக மணல் காற்றும் வீசி வருகிறது. அப்படி வீசி வரும் மணல் காற்றால் சாலையில் ஆங்காங்கே மணல்களால் மூடி, வாகனங்களும் இயக்க முடியாமல் போக்குவரத்தில் சிக்கிக் கொள்கிறது.