புயலாக மாறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு: சென்னை வானிலை ஆய்வு மையம்

 

புயலாக மாறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நாளை புயலாக மாறுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நாளை புயலாக மாறுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது: தென்கிழக்கு வங்கக்கடலில்  நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து நாளை புயலாக மாறும். இதனால் வருகிற 15, 16-ம் தேதிகளில் வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார்.

அதோபோல், இந்திய வானிலை மையத்தின் புயல் குறித்த பிரத்யேக முன்னெச்சரிக்கை செய்திக்குறிப்பில், தெற்கு வங்ககடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்று தென் கிழக்கு வங்ககடலில்  தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு உள்ளது,மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் மாறும் இது, நாளை சென்னை மற்றும் வடதமிழகம் நோக்கி நகரத் தொடங்கி, அடுத்த 48 மணி நேத்தில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியை நெருங்கும்.

இதனால், வருகிற 15, 16-ம் தேதிகளில் வடதமிழக கடலோர பகுதியிலும், தெற்கு ஆந்திராவிலும் பலத்த மழையும், ஒரு சில இடங்களில் மிக பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. குறைந்த நேரத்தில் அதிக அளவில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.