புமா நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் வாட்ச் இந்தியாவில் அறிமுகம் – விலை, சிறப்பம்சங்கள் உள்ளே

 

புமா நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் வாட்ச் இந்தியாவில் அறிமுகம் – விலை, சிறப்பம்சங்கள் உள்ளே

புமா நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: புமா நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புமா நிறுவனம் காலணிகள் தயாரிப்பு தொழிலில் பிரபலமாக இருந்து வருகிறது. அந்த நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் வாட்ச் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இங்கு வெளியிடப்படுவதற்கு முன்பாகவே சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட் வாட்ச் விற்பனைக்கு வெளியிடப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாட்ச்சை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் நீடிக்கும். இந்த ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 19,995 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் புகழ்பெற்ற ஃபாசில் நிறுவனத்துடன் இணைந்து இந்த வாட்ச்சை புமா நிறுவனம் வடிவமைத்துள்ளது.

ttn

இதன் சிறப்பம்சங்களாக கூகுள் வியர் ஓ.எஸ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 3100 வியர் பிராசஸர், 1.19 இன்ச் அமோ எல்.இ.டி டிஸ்பிளே, 512 எம்.பி ரேம், 4 ஜிபி மெமரி, அலுமினியம் டயல், சிலிகான் கை பட்டை, ப்ளூடூத் 4.2, பில்ட்-இன் ஜி.பி.எஸ், இதய துடிப்பு சென்சார், கூகுள் அசிஸ்டண்ட், ஸ்விம் ப்ரூஃப், கூகுள் பே மூலம் பேமண்ட் செய்யும் வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளது.

மேலும் கூகுள் ஃபிட் மூலம் பல்வேறு உடற்பயிற்சிகளை டிராக் செய்யும் வசதியை கொண்டிருக்கிறது. இதுதவிர உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு இந்த வாட்ச்சை வொர்க்-அவுட் மோடில் செட் செய்துவிட்டால் இதயத் துடிப்பையும் தொடர்ச்சியாக கண்காணிக்கும். புமா விற்பனை மையங்கள், புமா வலைதளம் மற்றும் ஃப்ளிப்கார்ட் மூலம் இந்த ஸ்மார்ட் வாட்ச்சை வாங்க முடியும். இந்த சாதனத்திற்கு 2 வருடங்கள் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.