புனித எண்ணெயை தொடும் ஆசையில்,நெர்சலில் சிக்கி 20 பேர் சாவு.

 

புனித எண்ணெயை தொடும் ஆசையில்,நெர்சலில் சிக்கி 20 பேர் சாவு.

டான்சானியா கிழக்காப்பிரிக்காவில் இருக்கும் ஒரு சிறியநாடு.மக்கள் தொகை 55 லட்சம் பேர்.அதில் பெரும்பகுதி புராட்டஸ்டெண்ட் மதத்தைச் சேர்ந்தவர்கள். அந்த நாட்டின் பிரபல மதபோதகர் போனிபேஸ் மவம்போசா.இவர்,எழு,ஒளிவீசு என்கிற பெயரில் ஒரு திருச்சபையை கட்டி நடத்தி வருகிறார்.

டான்சானியா கிழக்காப்பிரிக்காவில் இருக்கும் ஒரு சிறியநாடு.மக்கள் தொகை 55 லட்சம் பேர். அதில் பெரும்பகுதி புராட்டஸ்டெண்ட் மதத்தைச் சேர்ந்தவர்கள். அந்த நாட்டின் பிரபல மதபோதகர் போனிபேஸ் மவம்போசா.இவர்,எழு,ஒளிவீசு என்கிற பெயரில் ஒரு திருச்சபையை கட்டி நடத்தி வருகிறார். அந்த சபையின் சார்பாக நேற்று முன்தினம் டான்சானியாவின் வடக்கு பகுதியில்,கிளிமஞ்சாரோ மலைச் சரிவில் அமைந்திருக்கும் மோஷி நகரில் உள்ள ஸ்டேடியத்தில் ஒரு நற்செய்தி கூட்டத்தை நடத்தினார். பல்லாயிரம்பேர் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

tanzania-death

போதகர் போனிபேஸ் மவம்போசா தன்னை இறைத்தூதர் என்று கூறிக்கொள்வது வழக்கம். அதை இந்த மக்கள் நம்புகிறார்கள் ,அதனால்தான் மற்ற போதகர்களைவிட இவருக்குக் கூட்டம் அதிகமாக வருகிறது. அந்தக்கூட்டத்தில் மவம்போசாவின் வழக்கமான உரையும்,பிரார்த்தனைகளும் முடிந்த பிறகு அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.அதன் படி அவரிடம் ஒரு மந்திரிக்கப்பட்ட எண்ணெய் இருப்பதாகவும்,அதைத் தொட்டாலே அவர்கள் வாழ்க்கை வழமாகும் என்றும்,அவர்களுக்கு இருக்கும் எல்லா வகை நோய்களும் குண்மாகும் என்றும் அந்த அறிவிப்பில் சொன்னார்.

tanzania-death-stampede

அதைத் தொடர்ந்து மவம்போசா அந்தப் ‘புனித’ எண்ணெயை மேடையின் முன்னால் ஊற்றினார்.அந்த எண்ணெயை தொட ஒரே சமையத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முண்டியடித்ததால் நெரிசல் ஏற்பட்டது.அந்த நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 20 பேர் இறந்திருக்கிறார்கள். சாவு எண்ணிக்கை இன்னும் கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து போதகர் போனிபேஸ் மவம்போசா கைது செய்யப்பட்டு இருக்கிறார்.