புத்தாண்டை முன்னிட்டு திருப்பதியில் இரண்டு நாட்களுக்குச் சிறப்பு தரிசனம் ரத்து !

புத்தாண்டை முன்னிட்டு திருப்பதியில் இரண்டு நாட்களுக்குச் சிறப்பு தரிசனம் ரத்து !

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இரண்டு நாட்களுக்குச் சிறப்பு தரிசனங்களையும் அனைத்து ஆர்ஜித சேவைகளையும் ரத்து செய்யப்போவதாகத் திருமலை, திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இரண்டு நாட்களுக்குச் சிறப்பு தரிசனங்களையும் அனைத்து ஆர்ஜித சேவைகளையும் ரத்து செய்யப்போவதாகத் திருமலை, திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ttn

இது குறித்துப் பேசிய கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, “ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது. அதனால் இன்று, நாளை மற்றும்  வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் 6 மற்றும் 7 ஆம் தேதி சாமானிய மக்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக நாராயணகிரி பகுதியில் மக்கள் வரிசையில் வருவதற்காகத் தனி ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.” என்று தெரிவித்தார். 

ttn

அதனைத் தொடர்ந்து, வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசிக்கு வழக்கமாக வழங்கப்படும் தர்ம மற்றும் திவ்ய தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த விழாக்களன்று ஆன்லைன் மூலம் பெறப்பட்ட ரூ.300 சிறப்பு தரிசனம் மூலம் 5 ஆயிரம் பேர் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

ttn

வைகுண்ட ஏகாதசியன்று அதாவது 6 ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சாதாரண மக்கள் காலை 5 மணி முதல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அதே போல, ஏகாதசியை முன்னிட்டு 5 ஆம் தேதி 24 மணி நேரமும் மலைப்பாதை திறந்து வைக்கப்படுவதோடு, அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.