புத்தாண்டு, பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள்: எந்நெந்த ஊர்களுக்கு தெரியுமா?

 

புத்தாண்டு, பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள்: எந்நெந்த ஊர்களுக்கு  தெரியுமா?

புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் மற்றும் வார இறுதி நாட்களில் தெற்கு ரயில்வே சார்பில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை: புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் மற்றும் வார இறுதி நாட்களில் தெற்கு ரயில்வே சார்பில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் கோடை மற்றும் விழாக்காலங்களில் பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க தெற்கு ரயில்வே கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்குவது வழக்கம். அந்த வகையில் இவ்வருடம், செங்கோட்டையிலிருந்து சென்னை எழும்பூருக்கு ஜனவரி 1 மற்றும் 15-ம் தேதிகளில் சுவிதா ரயில் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையே, டிசம்பர் 31 முதல் பிப்ரவரி 25 வரை அனைத்து திங்கட்கிழமைகளிலும் சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. ஜனவரி 8 முதல் பிப்ரவரி 26 வரை அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது.

நாகர்கோவில் – சென்னை

நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஜனவரி 2 மற்றும் 16-ம் தேதிகளில் சுவிதா ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு ஜனவரி ஒன்று முதல் பிப்ரவரி 26 வரை அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் சிறப்பு கட்டண ரயில் புறப்படும். மறுமார்க்கத்தில், ஜனவரி 9 முதல் பிப்ரவரி 27 வரை அனைத்து புதன்கிழமைகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூர் – திருநெல்வேலி 

சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு ஜனவரி 4, 11, 12, 18 25, பிப்ரவரி 1, 8, 15, 22 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கத்தில், ஜனவரி 3, 6, 10, 15, 16, 27 பிப்ரவரி 17, 24 ஆகிய நாட்களிலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.