புத்தாண்டு தள்ளுபடி ! ஒரு மீன் வெறும் 13 கோடி ரூபாய்தான் ! நம்ம ஜப்பானில்…

புத்தாண்டு தள்ளுபடி ! ஒரு மீன் வெறும் 13 கோடி ரூபாய்தான் ! நம்ம ஜப்பானில்…

உலகெங்கும் நடைபெறும் நிகழ்வுகளை செய்தி வடிவில் தரும் ராய்ட்டர்ஸ் நிறுவன இந்த ஆச்சரிய தகவலை வெளியிட்டுள்ளது. ஜப்பன் தலைநகர் டோக்கியோவில், ஆண்டின் தொடக்கத்திலேயே ஒரு மீன் 13 கோடி ரூபாய்க்கு ஏலம்போனதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே இதேபோன்று ஒரு மீன் அதிக விலைக்கு ஏலம் போனது.   

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள சந்தையில் ஒரு மீன் அதிகபட்சமாக 13 கோடி ரூபாய்க்கு ஏலம் போன உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. 
உலகெங்கும் நடைபெறும் நிகழ்வுகளை செய்தி வடிவில் தரும் ராய்ட்டர்ஸ் நிறுவன இந்த ஆச்சரிய தகவலை வெளியிட்டுள்ளது. ஜப்பன் தலைநகர் டோக்கியோவில், ஆண்டின் தொடக்கத்திலேயே ஒரு மீன் 13 கோடி ரூபாய்க்கு ஏலம்போனதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே இதேபோன்று ஒரு மீன் அதிக விலைக்கு ஏலம் போனது.   
கடலின் ஆழ்பகுதியில் விற்கப்படும் மீன்கள் டோக்கியோவின் டொயோசு மீன்சந்தையில் விற்கப்படுவது வழக்கம். அப்போது 276 கிலோ எடை கொண்ட பெரிய மீன் ஒன்று இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 13 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இவ்வளவு பெரிய தொகைக்கு விலை போய் உள்ள மீனை ஏலம் எடுத்தவர் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக மாறியுள்ளது. இந்த டுனா மீன் வடக்கு அமோரி பிரிஃபெக்ச்சர்-ல் இருந்து பிடிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள மீன் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
இந்த மீனை ஏலம் எடுத்தவர் சீனாவில் உணவகம் நடத்தி வரும் கியோஷி கிமுரா என்பவர்தான்.