புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம்; 19 குழந்தைகள் உட்பட 94 பேர் பலி

 

புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம்; 19 குழந்தைகள் உட்பட 94 பேர் பலி

குர்திஷ் இன மக்களின் புத்தாண்டு (நவ்ருஸ்) கொண்டாட்டத்தில் ஏற்பட்ட விபரீதத்தில் 19 குழந்தைகள் உட்பட 94 பேர் உயிரிழந்தனர்.

மொசூல்: குர்திஷ் இன மக்களின் புத்தாண்டு (நவ்ருஸ்) கொண்டாட்டத்தில் ஏற்பட்ட விபரீதத்தில் 19 குழந்தைகள் உட்பட 90-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

ஈராக் நாட்டின் மொசூல் நகரில் குர்திஷ் இன மக்களின் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக டைகரிஸ் நதியை கடந்து மறுபுறம் சென்று புத்தாண்டை கொண்டாட 150 -க்கும் அதிகமானோர் கப்பல் ஒன்றில் புறப்பட்டனர். ஆட்கள் அதிகமாய் இருந்ததால் கப்பல் தடுமாறி கவிழ்ந்தது, நதி நீரின் வேகத்தில் பலரும் அடித்துச் செல்லப்பட்டனர்.

iraq

தகவல் அறிந்து மீட்பு பணி துவங்கும் முன் 61 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 94 பேர் உயிரிழந்தனர். 55 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ferry

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஈராக் பிரதமர் அதில் அப்துல் மெஹதி இரங்கல் தெரிவித்து, நாடு முழுவதும் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் விபத்து குறித்து ஆராய்ந்து காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.