புதையலில் பங்கு வேணும்! இளைஞரை கடத்தி மிரட்டிய பெண் காவலர்!  விதவிதமா  கிளம்பறாங்கப்பா!

 

புதையலில் பங்கு வேணும்! இளைஞரை கடத்தி மிரட்டிய பெண் காவலர்!  விதவிதமா  கிளம்பறாங்கப்பா!

காவல் துறை உங்கள் நண்பன்…என்று எத்தனை கமிஷ்னர்கள் வந்து வாய்கிழிய பேசி மக்களின் நண்பனாக மாறுவதற்கு முயற்சி மேற்கொண்டு வந்தாலும், காவல் துறையில் வருஷக்கணக்கில் புரையோடி போயிருக்கும் லஞ்ச, லாவண்யங்களை அத்தனை சீக்கிரத்தில் அழிக்க முடியாது போல. காக்கிச் சட்டையைப் போட்டாலே எல்லோரும் நமக்கு சலாம் வைப்பாங்க என்கிற போக்கு காவல்துறையில் இருப்பவர்களுக்கு இருக்கும் வரையில் காவல்துறையின் மீதான களங்கம் விலகப் போவதில்லை.

காவல் துறை உங்கள் நண்பன்…என்று எத்தனை கமிஷ்னர்கள் வந்து வாய்கிழிய பேசி மக்களின் நண்பனாக மாறுவதற்கு முயற்சி மேற்கொண்டு வந்தாலும், காவல் துறையில் வருஷக்கணக்கில் புரையோடி போயிருக்கும் லஞ்ச, லாவண்யங்களை அத்தனை சீக்கிரத்தில் அழிக்க முடியாது போல. காக்கிச் சட்டையைப் போட்டாலே எல்லோரும் நமக்கு சலாம் வைப்பாங்க என்கிற போக்கு காவல்துறையில் இருப்பவர்களுக்கு இருக்கும் வரையில் காவல்துறையின் மீதான களங்கம் விலகப் போவதில்லை. சென்ற வாரம் நடுரோட்டில், கைக்குழந்தைகளுடன் ஒரு பெண் கெஞ்சிக் கொண்டிருந்த போதும், காவலர் என்கிற கெத்துக் காட்டிய இரண்டு போலீசாரையும் பணிமாற்றம் செய்தார்கள். கன்னியாகுமரியில் நடந்த விஷயம் அதற்கும் மேல் பயங்கரமாக இருக்கு.

kidnap

கன்னியாகுமரி மாவட்டம் சரல்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெர்லின்(24). இவர் ஜேசிபி இயந்திரத்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் இரு கார்கள், ஒரு ஜே.சி.பி. இயந்திரத்தை சொந்தமாக வாங்கியுள்ளார். ஜெர்லினிடம் திடீரென பணப்புழக்கம் அதிகமானதால், ஜெர்லினுக்கு புதையல் கிடைத்துள்ளதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்ததையொட்டி, ஜெர்லினிடம் விசாரணை நடத்தினார்கள். 

pondevi

இந்நிலையில், ஜெர்லினை பண்ணைத் தோட்டத்திற்கு கடத்திச் சென்று, தங்கப் புதையலில் பங்கு வேண்டும் என அடையாளம் தெரியாதவர்கள் அடித்துள்ளனர். அவர் அணிந்திருந்த 7 சவரன் நகைகளையும் பறித்து கொண்டும் விரட்டியுள்ளனர். இது குறித்து காவல் துறையினரிடம் ஜெர்லின் புகார் அளித்தார். புகாரையடுத்து, விசாரணையில் இறங்கிய குளச்சல் உதவி காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பல திடுக்கிடும் திருப்பங்களைச் சந்தித்தார். ஜெர்லினை கடத்தியதாக பள்ளி ஆசிரியர் சுரேஷ்குமார், ஜெரின்ராபி, கிருஷ்ணகுமார் ஆகிய மூன்று பேரை அதிரடியாக கைது செய்தார். அவர்கள் கருங்கல் காவல் நிலைய ஆய்வாளர் பொன்தேவி, தலைமைக் காவலர் ஜெரோன் ஜோன்ஸ், சிறப்பு உதவி ஆய்வாளர் ரூபன் ஜெபதிலக் ஆகியோரைக் கைகாட்டினார்கள். மேலும் விசாரணையில், பண்ணை வீட்டிற்கு ஆய்வாளர் பொன்தேவி சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. செல்ஃபோனில் இந்த கும்பலிடம் பொன்தேவி அடிக்கடி பேசியதும் தெரிய வந்தது.  இதையடுத்து, பொன்தேவி, தலைமைக் காவலர் ரூபன் ஜெயதிலக், சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெரோன்ஜோன்ஸ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்கள். தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் புதையலை சரிசமமாக எல்லோரும் பங்கு போட்டுக் கொண்டதாக ஊர் மக்கள் எள்ளி சிரிக்கிறார்கள்!