புது வெள்ளை மழை: வைரலாகும் நடிகை ஸ்ரேயா வீடியோ!

 

புது வெள்ளை மழை: வைரலாகும் நடிகை ஸ்ரேயா வீடியோ!

நடிகை ஸ்ரேயா பனியில் நனைந்தபடி ரோஜா பட பாடலை ஹம்மிங் செய்யும்  வீடியோ வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைத்துள்ளது.

சென்னை: நடிகை ஸ்ரேயா பனியில் நனைந்தபடி ‘ரோஜா’ பட பாடலை ஹம்மிங் செய்யும்  வீடியோ வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைத்துள்ளது.

பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை ஸ்ரேயா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும், ஒருசில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். அரவிந்த் சாமியுடன் இவர் நடித்திருந்த நரகாசூரன் படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இவர் கடந்த மே மாதம் ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவை  திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரேயா, பனியில் விளையாடும் வீடியோ ஒன்றைத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் இடம்பெற்றுள்ள புது வெள்ளை மழை பாடலை ஹம்மிங் செய்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அரவிந்த் சாமியுடன் இவர் நடித்துள்ள  நரகாசூரன் படம் விரைவில் ரிலீசாக இருப்பது குறிப்பிடத்தக்கது.