புது முகங்களுடன் களமிறங்கும் இயக்குனர் பாக்யராஜின் சின்னவீடு பார்ட் 2?

 

புது முகங்களுடன் களமிறங்கும் இயக்குனர் பாக்யராஜின் சின்னவீடு பார்ட் 2?

பாக்யராஜ் இயக்கி நடித்திருந்த சின்ன வீடு படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை: பாக்யராஜ் இயக்கி நடித்திருந்த சின்ன வீடு படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கே.பாக்யராஜ் யுகம் சினிமாவில் இன்னும் முடிந்து விடவில்லை. அவரது இடம் அப்படியேதான் இருக்க்கிறது. தெலுங்கில் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார். இவரது திரைக்கதைக்கு பாலிவுட்டில் இப்போதும் மரியாதை இருக்கிறது.

பாலிவுட்டில் அமிதாப். அனில்கபூர், கோவிந்தா ஆகியோருக்கு மறுவாழ்வு கிடைத்தது, பாக்யராஜின் ரீமேக் படங்களில் இவர்கள் நடித்த பிறகுதான் அந்தளவுக்கு இவர் மீது எல்லோருக்கும் மரியாதை இருக்கிறது. சமீபத்தில் கூட பாலிவுட்டிலிருந்து இவரிடம் திரைக்கதை குறித்த யோசனை கேட்டு போயிருக்கிறார் பாலிவுட் இயக்குனர் ஒருவர்

Bhagyaraj 2

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாக்யராஜ் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். அது என்பதுகளில் இவரது இயக்கத்தில் வெளிவந்தசின்ன வீடுபடத்தின் இரண்டாம் பாகத்தைதான் எடுக்க இருக்கிறார். இந்தப் படத்தில் புதியவர்கள் நடிப்பார்கள். மிக முக்கியமான பாத்திரத்தில் பாக்யராஜ் கோவை சரளா ஆகியோர் நடிப்பார்கள் என்று தெரிகிறது. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.