புது செல்போன் வாங்கப் போறீங்களா? இதைப் படிச்சுட்டு முடிவு பண்ணுங்க!

 

புது செல்போன் வாங்கப் போறீங்களா? இதைப் படிச்சுட்டு முடிவு பண்ணுங்க!

இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செல்போன் மாற்றுகிற பழக்கம் இன்றைய இளைஞர்களிடையே இருந்து வருகிறது. ஆனால், செல்போன் வாங்கினா குறைஞ்சது நாலஞ்சு வருஷத்துக்காவது நல்லா இருக்கனும்…

இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செல்போன் மாற்றுகிற பழக்கம் இன்றைய இளைஞர்களிடையே இருந்து வருகிறது. ஆனால், செல்போன் வாங்கினா குறைஞ்சது நாலஞ்சு வருஷத்துக்காவது நல்லா இருக்கனும்… என்பவர்கள் இன்னும் ஒரு வாரம் காத்திருங்கள். நவம்பர் 5ம் தேதி சியோமி நிறுவனம் தனது புது மாடலை அறிமுகப்படுத்துகிறது. 108எம்பி கேமராவுடன் சியோமி மி சிசி9 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை முடிவு செய்திருக்கிறது.

xiomi

இந்த ஸ்மார்ட்போன் மாடலில் 6.4 இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு, 1080 பிக்சல், 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி என பக்காவாக திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த புது ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி கேமராவுடன் மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. 32எம்பி செஃல்பி கேமரா, எல்இடி ப்ளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகளுடன் இதன் வடிவமைப்பில் அதிக கவனம் செலுத்தி தயாரித்துள்ளது அந்நிறுவனம். 4000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் உள்ளன. ஆண்ட்ராய்டு 10 இயங்குதளமு இதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.