புது காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 24 மணிநேரத்தில் மழை!

புது காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 24 மணிநேரத்தில் மழை!

அரபிக்கடலில் உருவாகி வலுபெற்றிருக்கும் புயல்கள் ஒரு பக்கம் அச்சுறுத்திக் கொண்டிருக்க, அந்தமான் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

rain

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், கடந்த இரு தினங்களாக மழையில்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில், அந்தமானில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்பு உள்ளது.மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவான பிறகே  தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு குறித்து தெரிவிக்க முடியும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. காற்றின்  காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னையை பொறுத்த வரையில் வானம் பொதுவான மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னையின் சில பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.