புது கார்…புது டிரைவிங் லைசென்ஸ் – 10 நிமிடத்தில் காரை ஆற்றுக்குள் விட்ட சீன இளைஞர்

 

புது கார்…புது டிரைவிங் லைசென்ஸ் – 10 நிமிடத்தில் காரை ஆற்றுக்குள் விட்ட சீன இளைஞர்

ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக் கொண்டு திரும்பி வரும்போது தனது புதிய காரை சீன இளைஞர் ஒருவர் ஆற்றுக்குள் விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெய்ஜிங்: ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக் கொண்டு திரும்பி வரும்போது தனது புதிய காரை சீன இளைஞர் ஒருவர் ஆற்றுக்குள் விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜாங் என்ற சீன இளைஞர் ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக் கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ஆற்றுப் பாலம் ஒன்றில் காரை ஓட்டி வந்துள்ளார். அந்த நேரத்தில் காரை ஓட்டிக் கொண்டே தனது செல்போனை ஜாங் எடுத்து பார்த்திருக்கிறார். அப்போது பாலத்தில் இரண்டு பேர் நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களை பார்த்த உடனே பதட்டமடைந்த ஜாங், அவர்கள் மீது கார் கொண்டு இடித்து விடக் கூடாது என்பதற்காக சட்டென்று இடதுபக்கம் வளைத்து ஓட்ட முயன்றார்.

ttn

இதில் நிலை தடுமாறி கார் ஆற்றுக்குள் பாய்ந்தது. அந்த பாலத்தில் தடுப்பு சுவர்கள் ஏதும் இல்லை. கார் ஆற்று தண்ணீருக்குள் முழுவதுமாக மூழ்க ஓட்டுநர் கதவை ஜாங்கால் திறக்க முடியவில்லை. இதனால் காரின் மற்றொரு கதவை திறந்து ஆற்று நீருக்குள் இருந்து நீந்தி மேலே வந்துள்ளார். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ஜாங் ஆற்று நீருக்குள் விட்ட கார் புதிதாக பதிவு செய்யப்பட்ட புதிய காராகும். மேலும் ஓட்டுனர் உரிமம் பெற்ற 10 நிமிடத்தில் ஜாங் காரை ஆற்று நீரில் விட்டுள்ளார்.

ttn

இந்நிலையில், கிரேன் மூலம் காரை ஆற்றில் இருந்து தூக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜாங்-க்கு ஏதேனும் அபராதம் விதிக்கப்பட்டதா என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை. சீனாவை பொறுத்தவரை வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும்போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் அவர்களின் ஓட்டுநர் உரிமத்திலிருந்து இரண்டு புள்ளிகள் குறைக்கப்படுவதுடன் மற்றும் அதிகபட்சம் 200 சீன யுவான் அபராதமாக வசூலிக்கப்படும்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புஜியான் மாகாணத்தில் ஒரு பெண் அதிவேகமாக கார் ஓட்டிச் சென்றபோது எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்து, தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் அந்தப் பெண் இறந்தார். அவரது கார் விபத்தில் சிக்குவதற்கு முன்பு அரை மணி நேரத்தில் 34 தடவை அந்தப் பெண் செல்போனை பயன்படுத்தியிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வாகன் ஓட்டிகள் தவறு செய்தால் அபராதம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று சீன ஊடகங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.