புது அப்டேட்டை கேன்சல் செய்த வாட்ஸ்  அப்! 

 

புது அப்டேட்டை கேன்சல் செய்த வாட்ஸ்  அப்! 

வாட்ஸ் அப்பில் விரைவில் விளம்பரங்கள் வெளியிடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் அந்த முயற்சியை கைவிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வாட்ஸ் அப்பில் விரைவில் விளம்பரங்கள் வெளியிடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் அந்த முயற்சியை கைவிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இன்றைய நவீன உலகில் வாட்ஸ் அப் என்ற செயலி இல்லாத ஸ்மார்ட்போனும் இல்லை, அதனை பயன்படுத்தாத இளைஞர்களும் இல்லை என்ற நிலையில் உள்ளன் அந்த அளவுக்கு மிக முக்கியமான தொடர்பு கருவியாக வாட்ஸ் அப் செயலி இயங்குகிறது. வீடியோ, புகைப்படங்கள் பகிர்தல், சேட்டிங், குரூப் சேட்டிங், குரூப் காலிங், வீடியோ மற்றும் ஆடியோ கால் போன்ற அனைத்து வசதிகளும் வாட்ஸ் அப்பில் உள்ளது. இளைஞர் மற்ற சமூக வலைதளத்தைவிட வாட்ஸ் அப்பில்தான் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர் என அண்மையில் பரவலாக பேசப்பட்டது. அதுமட்டுமின்றி வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் தன்வசம் வாங்கிய பிறகு வாட்ஸ் அப்பில் பல பல புதிய அப்டேட்ஸ்கள் வந்து பயனர்களை குஷிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொழுதுபோக்கிற்காக இலவசமாக செயல்பட்டுவந்த பேஸ்புக், வருமான நோக்கத்தில் ஈடுபட திட்டமிட்டது. இதற்காக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களுக்கு இடையே விளம்பர நிறுவனத்தின் பெயர் சில நொடிகள் தெரியும்படியான அப்டேட்டை வழங்க திட்டமிட்டிருந்தது. 

வாட்ஸ் அப்

இந்நிலையில் விளம்பர முடிவை கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் ஸ்டேட்டஸில் விளம்பரம் வைப்பதற்காக உருவாக்கப்பட்ட குழுவையும் வாட்ஸ் அப் கலைத்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மட்டுமின்றி விளம்பரதாரர்களையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.