புதுவை ஆளுநரை விமர்சித்த நாஞ்சில் சம்பத்…கைதாக மறுப்பதால் போலீசார் பேச்சுவார்த்தை!

 

புதுவை ஆளுநரை விமர்சித்த நாஞ்சில் சம்பத்…கைதாக மறுப்பதால் போலீசார் பேச்சுவார்த்தை!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் மக்களவை தேர்தலுக்காகப் புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் பிரச்சாரம் நடைபெற்றது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் மக்களவை தேர்தலுக்காகப் புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் பிரச்சாரம் நடைபெற்றது. திமுக- காங்கிரஸ் கூட்டணிக்காக நடந்த அந்த பிரச்சாரத்தில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அப்போது, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆணா.. பெண்ணா என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனால் நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக அவர் மீது பெண்களை அவதூறாகப் பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

ttn

இந்நிலையில் இந்த வழக்கில் அவரை கைது செய்யக் குமரி மாவட்டம் மணலி கரையில் அவரது இல்லத்துக்கு இன்று காலை புதுச்சேரி போலீசார் சென்றுள்ளனர். அப்போது, 21 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருக்கும் நிலையில், முன்கூட்டியே கைது நடவடிக்கை எடுப்பது ஏன்.. இதில் ஏதோ சதி நடப்பதாகக் கூறி நாஞ்சில் சம்பத் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனால் அவரிடம் போலீசார் கைது நடவடிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.