புதுவெள்ளத்தை வரவேற்க தயாராகும் கல்லணை – ஆகஸ்ட் 16ல் திறப்பு

 

புதுவெள்ளத்தை வரவேற்க தயாராகும் கல்லணை – ஆகஸ்ட் 16ல் திறப்பு

கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடத்திற்கு பிரித்து விடப்படும் தண்ணீர்மூலம், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

விவசாயிகளின் கனிவான கவனத்திற்கு, மேட்டூரிலிருந்து ஈரோடு, திருச்சி முக்கொம்பு, கல்லணை, தஞ்சாவூர் வழியாக வங்காள விரிகுடாவை அடையும் காவிரி, ஆகஸ்ட் 15 இரவு அல்லது அடுத்த நாள் அதிகாலையில் கல்லணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுவெள்ளத்தை வரவேற்க கல்லணையில் மதகுகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

Kallanai magnificient aerial view

கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடத்திற்கு பிரித்து விடப்படும் தண்ணீர்மூலம், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். கல்லணையில் மதகுகள் சுத்தம் செய்யப்பட்டு மசகு எண்ணெய் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அணைக்கு வர்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் உள்ளது.