புதுச்சேரி: மசாஜ் சென்டர் தொடக்க விழாவுக்கு அழைத்து பணத்தை பறித்த கும்பல்!

புதுச்சேரி: மசாஜ் சென்டர் தொடக்க விழாவுக்கு அழைத்து பணத்தை பறித்த கும்பல்!

மசாஜ் சென்டர் தொடங்க விழா என்று தொழிலதிபரை அழைத்து அடித்து அவரிடமிருந்து பணத்தை பிடுங்கியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (63). தொழிலதிபரான இவருக்கும் கிழக்கு கடற்கரைச் சாலையில் மசாஜ் சென்டர் நடத்தி வரும் ராஜேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிதாக மசாஜ் சென்டர் தொடங்க இருப்பதாகவும், அதை நீங்கள் வந்து தொடங்கி வைக்க வேண்டும் என்று மஞ்சுநாத்தை அழைத்துள்ளார் ராஜேஷ். இதை நம்பி மஞ்சுநாத் சென்றுள்ளார்.

fight

அங்கு எந்த ஒரு பெயர்ப் பலகையும் இல்லை, தொடக்க விழாவுக்கான அறிகுறியே இல்லை. உள்ளே எல்லா ஏற்பாடுகளும் செய்துள்ளோம் என்று நம்பிக்கை வார்த்தைக் கூறி அவரை வீட்டுக்குள் அழைத்து சென்றுள்ளார் ராஜேஷ். உள்ளே சென்றபோது, மறைந்திருந்த வேறு சிலர் மஞ்சுநாத்தை சரமாரியாக அடிக்கத் தொடங்கியுள்ளனர். அவரிடமிருந்த செல்போன், பணம், நகைகளை பறித்துள்ளனர். பின்னர், அவருடைய வங்கி கணக்கில் இருந்த ரூ.5 லட்சம் பணத்தை, செல்போன் ஆப் மூலம் தங்கள் வங்கிக் கணக்குக்கு மாற்றியுள்ளனர். இது பற்றி சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி வெளியே வந்த மஞ்சுநாத், இது குறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
இதன் அடிப்படையில், ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் பிடித்தனர்.

police

மஞ்சுநாத்திடமிருந்து பிடுங்கிய பொருட்களை போலீசார் கைப்பற்றினர். பணத்தை அதற்குள் அவர்கள் வேறு கணக்குக்கு மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். உண்மையில் பணத்தை கொள்ளையடிக்க இப்படி செய்யப்பட்டதா அல்லது கொடுக்கல் வாங்கலில் பிரச்னை ஏதும் இவர்களுக்குள் இருந்ததா என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.