புதுச்சேரியில் 75 வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு!

 

புதுச்சேரியில் 75 வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு!

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா வைராஸால் இந்தியாவில் 139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona virus

இந்நிலையில் புதுச்சேரி பகுதி மாகே பள்ளூர் பகுதியை சேர்ந்த 75 வயது பெண், அபுதாபியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, கடந்த 3 நாட்களுக்கு  கோழிகோடு விமானம் நிலையம் மூலம் மாகே வந்தார். அப்போது அவருக்கு கடுமையான காய்ச்சல், சளி,  தலைவலி ஏற்பட்டது. இதனால் மாகே அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்பு அவரது ரத்தமாதிரிகள், கோழிகோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி ஆனது. இது குறித்து மாகே மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்டது. இதன் பேரில் அந்த பெண், மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கபட்டு வருகிறார்.