புதுச்சேரியில் நாளை மதுக்கடைகள் திறப்பு.. குடிமகன்கள் கொண்டாட்டம்!

 

புதுச்சேரியில் நாளை மதுக்கடைகள் திறப்பு.. குடிமகன்கள் கொண்டாட்டம்!

ஊரடங்கில் செய்யப்பட உள்ள தளர்வுகள் தொடர்பாகவும், மதுக்கடைகளை திறப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

கொரோனா அச்சுறுத்தலால் புதுச்சேரியில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதன் காரணமாக அங்கு 50 நாட்களுக்கும் மேலாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. அதனால் மதுக்கடைகளை திறப்பது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் தலைமை செயலாளரும் கலந்து கொண்டனர். அதில், ஊரடங்கில் செய்யப்பட உள்ள தளர்வுகள் தொடர்பாகவும், மதுக்கடைகளை திறப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

ttn

அதன் முடிவில் நாளை புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க முடிவெடுக்கப்பட்டது. அதன் படி காலை 8மணி முதல் இரவு 7 மணி வரையிலும் மதுக்கடைகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் கடைகள் காலை 9.30 முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்க வேண்டும். உட்கார்ந்து சாப்பிடும் பார்களுக்கு அனுமதியில்லை. 50 நாட்களாக மதுக்கடைகள் இல்லாமல் தவித்து வந்த குடிமகன்களுக்கு இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது நல்ல வருவாயை ஈட்டியது போல, புதுச்சேரியிலும் வருவாய் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.