புதுச்சேரியில் ஒரு அத்திவரதர் : கூட்டமாகச் சென்று பக்தர்கள் வழிபாடு! 

 

புதுச்சேரியில் ஒரு அத்திவரதர் : கூட்டமாகச் சென்று பக்தர்கள் வழிபாடு! 

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம் கடந்த 1-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம் கடந்த 1-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  48 நாட்களுக்கு நடைபெறும் இந்த அரிய காட்சியைக் காண பல்வேறு நாடுகளிலிருந்து பக்தர்கள் கூட்டம் அலை போதிக்கின்றனர். கூட்ட நெரிசலினால் பாதி பக்தர்கள் தரிசனம் செய்யமுடியாமல் திரும்பி செல்கின்றனர். 

அப்படி காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசிக்க முடியாத பக்தர்கள் புதுவையில் உள்ள அத்திவரதரை தரிசிக்கலாம். ஆம்.. புதுச்சேரியில் செயின்ட் தெரசா வீதியில் 200 ஆண்டு பழமை வாய்ந்த  ராமானுஜர் பஜனை மடம் உள்ளது. அங்கு 2011ம் ஆண்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத அனந்த ரங்கநாதர் சன்னதி நிறுவப்பட்டது.

ஆதிசே‌ஷன் மீது அனந்த சயன கோலத்தில் 6 அடி நீளத்தில் காட்சி தருகிறார். கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ள இவர் கையில் சங்கு, சக்கராயுதம் ஏந்தியுள்ளார். அங்கு ஆண்டு தோறும் 2 முறை இரு முறை, மூலிகைகளால் தைலக்காப்பு செய்து பாதுகாப்படுகிறது. மேலும் ரேவதி, திருவாதிரை நட்சத்திர நாட்களில் சிறப்பு வழிபாடு உண்டு என்பதால் காஞ்சிபுரத்தில் தரிசிக்க முடியாதவர்கள் புதுவை சென்று தரிசனம் செய்யலாம்.