புதுசா பைக் வாங்குறவர்களுக்கு இனிமே இரண்டு ஹெல்மெட் இலவசம்!

 

புதுசா பைக் வாங்குறவர்களுக்கு இனிமே  இரண்டு ஹெல்மெட் இலவசம்!

இருசக்கர வாகனம் வாங்கும் போது 2 ஹெல்மெட்டுகள் இலவசமாக வழங்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள், டீலர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இருசக்கர வாகனம் வாங்கும் போது 2 ஹெல்மெட்டுகள் இலவசமாக வழங்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள், டீலர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

helmet

பரபரப்பான சூழலில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன் எண்ணிக்கைக்கு ஏற்ப விபத்துகளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் நடந்த சாலை விபத்துக்களில் 12,200 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும், அதில்  ஹெல்மெட் அணியாததால்  உயிரிழந்தவர்கள்  73 சதவீதம் பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

bike helmet

இந்நிலையில்  விபத்துகளைத் தடுக்கும் நோக்கத்தோடு,  இருசக்கர வாகனம் வாங்கும் போது 2 ஹெல்மெட்டுகள் இலவசமாக வழங்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள், டீலர்களுக்கு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டு அரசாணை பிறப்பித்துள்ளது. மேலும் தரமான ISI முத்திரை  பதித்த ஹெல்மெட்டுகளை வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.  புதிய வாகனம் வாங்கும் போது  இரண்டு ஹெல்மெட்டுகள் தருவதால் நஷ்டம் ஏற்படும் என்று சில இருசக்கர வாகன டீலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.